ஐபிஎல் 2020: இந்த சீசனில் ஆரஞ்சு தொப்பியை வெல்லப்போவது எந்த வீரர்..?

First Published Sep 7, 2020, 7:38 PM IST

ஐபிஎல் 13வது சீசனுக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. வரும் 19ம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், இந்த சீசனில் ஆரஞ்சு தொப்பியை வெல்ல வாய்ப்புள்ள 5 வீரர்களை பார்ப்போம்.

ஆண்ட்ரே ரசல், ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு, தோனி போன்றோர் அதிரடி வீரர்கள் தான் என்றாலும், அவர்கள் பின்வரிசையில் இறங்குவதால், பெரும்பாலும் டாப் ஆர்டர் வீரர்களுக்குத்தான் ஒரு சீசனில் அதிக ரன்களை குவிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அந்தவகையில், அந்த வாய்ப்புள்ள வீரர்கள் யார் யார் என்று பார்ப்போம்.
 

1. கேஎல் ராகுல் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்)கடந்த சீசனில் அருமையாக ஆடிய கேஎல் ராகுல், இந்த சீசனில் பஞ்சாப் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். ராகுல் செம ஃபார்மில் இருப்பதால், அவர் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
undefined
2. ரோஹித் சர்மா (மும்பை இந்தியன்ஸ்)மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் லாக்டவுனுக்கு முன் செம ஃபார்மில் தான் இருந்தார். எனவே ரோஹித்தும் இந்த சீசனில் சிறப்பாக பேட்டிங் ஆடுவார். ரோஹித் கடந்த சீசனில் பெரியளவில் பேட்டிங் ஆடவில்லை. ஆனாலும் அந்த அணி கோப்பையை வென்றது. எனவே ரோஹித் சர்மா இந்த சீசனில் பேட்டிங்கில் மிரட்டினால், மும்பை இந்தியன்ஸ் மறுபடியும் கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ளது. ஏனெனில் அந்த அணி மிகச்சிறந்த வீரர்களை கொண்ட நல்ல கலவையிலான பலமான அணி. ரோஹித் சர்மா ஃபார்மில் இருப்பதால் அவரும் அதிக ரன்கள் அடிக்க வாய்ப்புள்ளது.
undefined
3. விராட் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)ஆர்சிபி அணிக்கு முதல் முறையாக கோப்பையை வென்று கொடுக்கும் முனைப்பில் உள்ள கோலி, 2016 சீசனில் ஆடியதை போல ஆடினால், ஆர்சிபியை எந்த அணியாலும் அடிச்சுக்க முடியாது. விராட் கோலிக்கும் பிரகாசமான வாய்ப்புள்ளது.
undefined
4. ஆரோன் ஃபின்ச் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)ஆஸ்திரேலிய வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிகளின் கேப்டன் ஆரோன் ஃபின்ச்சை இந்த சீசனில் ஆர்சிபி அணி ஏலத்தில் எடுத்துள்ளது. ஃபின்ச் செம ஃபார்மில் இருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான நடப்பு டி20 தொடரில் மிரட்டலாக பேட்டிங் ஆடிவருகிறார். எனவே அதே ஃபார்மை ஐபிஎல்லிலும் தொடர்வார் என்பதில் ஐயமில்லை.
undefined
5. டேவிட் வார்னர் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)ஐபிஎல்லின் வெற்றிகரமான வீரர்களில் டேவிட் வார்னரும் ஒருவர். எனவே வார்னர் ரன்களை குவிக்கவில்லை என்றால்தான் ஆச்சரியம். அதனால் இந்த லிஸ்ட்டில் இவரும் இருக்கிறார்.
undefined
click me!