ஐபிஎல்லில் அதிக வெற்றிகளை பெற்ற டாப் 5 கேப்டன்கள்

First Published Sep 6, 2020, 4:11 PM IST

ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. இந்நிலையில், ஐபிஎல்லில் ஒரு கேப்டனாக அதிக வெற்றிகளை பெற்ற டாப் 5 கேப்டன்கள் யார் யார் என்று பார்ப்போம்.
 

1. தோனி - சிஎஸ்கே கேப்டன்(2008 - 2015 மற்றும் 2018 - 2019) ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்(சில போட்டிகள்)தோனி ஐபிஎல்லில் இதுவரை மொத்தமாக 174 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 104 வெற்றிகளை பெற்றுள்ளார். 69 தோல்விகள்.
undefined
2. கவுதம் கம்பீர் - டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (2009-2018)கம்பீர் 129 ஐபிஎல் போட்டிகளில் கேப்டன்சி செய்து 71 வெற்றிகளை பெற்றுள்ளார்.
undefined
3. விராட் கோலி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (2011-2019)விராட் கோலி 110 ஐபிஎல் போட்டிகளில் கேப்டன்சி செய்து 49 வெற்றிகளை பெற்றுள்ளார். 55 தோல்விகள்.
undefined
4. ரோஹித் சர்மா - மும்பை இந்தியன்ஸ்(2013-2019)ரோஹித் சர்மா 104 போட்டிகளில் கேப்டன்சி செய்து 60 வெற்றிகளை பெற்று இந்த பட்டியலில் நான்காமிடத்தில் உள்ளார். 42 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளார்.
undefined
5. ஆடம் கில்கிறிஸ்ட் - டெக்கான் சார்ஜர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் (2008-2013)கில்கிறிஸ்ட் 74 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து 35 வெற்றிகளை பெற்றுள்ளார். 39 போட்டிகளில் அவரது கேப்டன்சியில் அவரது அணி தோல்வியை தழுவியுள்ளது.
undefined
click me!