CSK vs SRH: அதிரடி மாற்றங்களுடன் அதகளப்படுத்த வரும் சிஎஸ்கே..! உத்தேச ஆடும் லெவன்

First Published Oct 2, 2020, 2:57 PM IST

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசன் ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியான சிஎஸ்கேவிற்கு நல்ல தொடக்கமாக அமையவில்லை. முதல் 3 போட்டிகளில் ஒரு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது சிஎஸ்கே.
undefined
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய 2 அணிகளிடமும் படுதோல்வியடைந்த சிஎஸ்கே, சன்ரைசர்ஸுக்கு எதிரான இன்றைய போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது.
undefined
ராயுடு மற்றும் பிராவோ ஆகிய இருவரும் காயத்திலிருந்து மீண்டு இந்த போட்டியில் ஆட தயாராகவுள்ளனர் என்று ஏற்கனவே சிஎஸ்கே அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுவிட்டது. எனவே ராயுடுவும் பிராவோவும் அணிக்குள் வருவதால் முரளி விஜயும் ஜோஷ் ஹேசில்வுட்டும் நீக்கப்படுவார்கள்.
undefined
சிஎஸ்கே அணியில் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் இல்லாதது அந்த அணிக்கு பின்னடைவு. மேலும் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் ஷேன் வாட்சன், ராயுடு, கேதர் ஜாதவ் ஆகியோர் சர்வதேச போட்டிகளிலோ அல்லது வேறு போட்டிகளிலோ ஆடி நீண்டகாலம் ஆகிவிட்டது. அதனால், பயிற்சியில் ஆடியிருந்தாலும் கூட, களத்தில் இறங்கி ஆடி நீண்ட காலம் ஆயிற்று. முரளி விஜய் ஒருவேளை இறக்கப்பட்டாலும், அவரது நிலையும் அதே தான்.
undefined
பியூஷ் சாவ்லா கடைசி 2 போட்டிகளிலும் சரியாக பந்துவீசவில்லை. எனினும் இம்ரான் தாஹிருக்கு அணியில் கிடைக்க வாய்ப்பில்லை என்பதால், சீனியர் ஸ்பின்னர் என்ற முறையில், பியூஷ் சாவ்லா தான் ஸ்பின்னராக ஆடுவார். அவர் தனது அனுபவத்தையும் திறமையையும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
undefined
சிஎஸ்கே அணியின் உத்தேச ஆடும் லெவன்:ஷேன் வாட்சன், ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டுப்ளெசிஸ், அம்பாதி ராயுடு, சாம் கரன், தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, பிராவோ, தீபக் சாஹர், பியூஷ் சாவ்லா.
undefined
click me!