CSK vs MI: எதிர்காலத்தை மனதில்வைத்து சிஎஸ்கே அணியில் தாறுமாறு மாற்றங்கள்.. தெறி டீம்

First Published Oct 23, 2020, 1:41 PM IST

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் சிஎஸ்கே அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 13வது சீசன் சிஎஸ்கே அணிக்கு கொடுங்கனவாக அமைந்துவிட்டது. ஆடிய அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்ற ஒரே அணி என்ற சாதனைக்கு சொந்தக்கார சிஎஸ்கே அணி, இந்த சீசனில் அந்த பெருமையை இழக்கிறது.
undefined
இந்த சீசனில் இதுவரை ஆடிய 10 போட்டிகளில் வெறும் 3 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் சிஎஸ்கே அணி, எஞ்சிய 4 போட்டிகளிலும் வென்றாலும், பிளே ஆஃபிற்கு செல்லும் வாய்ப்பு, மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியை பொறுத்தே அமையும். இந்த சீசனில் கிட்டத்தட்ட பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்.
undefined
அதுமட்டுமல்லாது எஞ்சிய 4 போட்டிகளில் சிஎஸ்கே எதிர்கொள்ளவுள்ள அணிகள், மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, கேகேஆர், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகும். எனவே சிஎஸ்கேவின் வெற்றி எளிதல்ல.
undefined
இந்நிலையில், இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்கிறது சிஎஸ்கே அணி. இந்த சீசனின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொண்ட சிஎஸ்கே, அந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்று வெற்றியுடன் இந்த சீசனை தொடங்கியது. ஆனால் அதன்பின்னர் சிஎஸ்கே தொடர் தோல்விகளால் சரிவை சந்திக்க, மும்பை இந்தியன்ஸ் அதற்கு நேர்மாறாக தொடர் வெற்றிகளை குவித்து ஆதிக்கம் செலுத்திவருகிறது.
undefined
எனவே சிஎஸ்கே அணி, இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்துவது எளிதல்ல. வலுவான அணி காம்பினேஷன் செட்டாகிவிட்ட நிலையில், எதிரணிகளை அடித்து துவம்சம் செய்துவரும் மும்பை இந்தியன்ஸை, இந்த சீசனில் இன்னும் ஆடும் லெவன் காம்பினேஷனே சரியாக அமையாத சிஎஸ்கே வீழ்த்துவது கிட்டத்தட்ட நடக்காத காரியம். ஏதேனும் அதிசயம் நடந்தால் தான் உண்டு.
undefined
சிஎஸ்கே அணியில், தொடர்ச்சியாக சரியாக ஆடாத சில வீரர்களை பிராசஸ் என்ற பெயரில் தொடர்ந்து ஆடவைத்த தோனியின் வியூகம் பலனளிக்காத நிலையில், இனிவரும் போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும். கேதர் ஜாதவ், வாட்சன், பியூஷ் சாவ்லா ஆகிய வீரர்கள் சொதப்பியபோதிலும் தொடர்ந்து ஆட வாய்ப்பளிக்கும் தோனி, ருதுராஜ் கெய்க்வாட், ஜெகதீஷன் ஆகிய வீரர்களுக்கு போதிய வாய்ப்பளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
undefined
கடந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு பின்னர், இளம் வீரர்கள் குறித்த கேள்விக்கு, அவர்களிடம் ஸ்பார்க்கை பார்க்கவில்லை என்ற தோனியின் கூற்று கடும் விமர்சனத்துக்குள்ளனது. அதே பேட்டியில், இனிவரும் போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்ற வாக்குறுதியையும் தோனி அளித்தார்.
undefined
அனுபவம் என்ற பெயரில் வயது முதிர்ந்த வீரர்களை வைத்து ஆடிவந்த சிஎஸ்கே அணியின் வியூகம் இனியும் பலனளிக்காது என்பதால், அணியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
undefined
அந்தவகையில் இன்றைய போட்டியில் வாட்சன் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக வெளிநாட்டு வீரராக லெக் ஸ்பின்னர் இம்ரான் தாஹிர் சேர்க்கப்படலாம். இம்ரான் தாஹிர் அணிக்குள் வருவதால் பியூஷ் சாவ்லா நீக்கப்படுவார். வாட்சனுக்கு பதில் தாஹிர்; பியூஷ் சாவ்லா நீக்கப்பட்ட இடத்தில் இளம் பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட். கேதர் ஜாதவுக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த ஜெகதீஷன். இந்த மாற்றங்களுடன் இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணி களமிறங்கும்.
undefined
சிஎஸ்கே அணியின் உத்தேச ஆடும் லெவன்:சாம் கரன், ஃபாஃப் டுப்ளெசிஸ், ருதுராத் கெய்க்வாட், அம்பாதி ராயுடு, ஜெகதீசன், தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், இம்ரான் தாஹிர், ஜோஷ் ஹேசில்வுட்.
undefined
click me!