DC vs CSK: என்னது மறுபடியும் கேதர் ஜாதவா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்

First Published Oct 17, 2020, 4:13 PM IST

டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் சிஎஸ்கே அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 13வது சீசனில் இன்று 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில், வெற்றி கட்டாயத்தில் களமிறங்கும் சிஎஸ்கே அணி, இந்த சீசனில் அருமையாக ஆடி புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் இருக்கும் டெல்லி கேபிடள்ஸை எதிர்கொள்கிறது.
undefined
இரு அணிகளும் இந்த சீசனில் இதற்கு முன் ஆடிய முதல் போட்டியில் டெல்லி கேபிடள்ஸ் அணி அபார வெற்றி பெற்ற நிலையில், மீண்டும் இன்று டெல்லி கேபிடள்ஸை எதிர்கொள்கிறது சிஎஸ்கே.
undefined
இந்த போட்டி சிறிய மைதானமான ஷார்ஜாவில் நடக்கவுள்ளதால், ஒரு பவுலரை குறைத்து, கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் ஆட வாய்ப்புள்ளது. ஷார்ஜாவில் சிஎஸ்கே இதற்கு முன் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், அதிக ரன்களை வாரி வழங்கிய பியூஷ் சாவ்லாவிற்கு பதிலாக, கூடுதல் பேட்ஸ்மேனாக கேதர் ஜாதவ் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
undefined
கேதர் ஜாதவ் இந்த சீசனில் ஆறு போட்டிகளில் ஆடி ஒரு போட்டியில் கூட சரியாக பேட்டிங் ஆடாமல், வெறும் 58 ரன்கள் மட்டுமே அடித்திருந்த நிலையில், அணிக்கு எந்த பங்களிப்புமே செய்யாத கேதர் ஜாதவ் அணியில் எதற்கு என்ற கேள்வி எழுந்த நிலையில், அது பெரும் விவாதமாகவும் வெடித்த நிலையில், கேதர் ஜாதவ் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.
undefined
ஷார்ஜா மைதானம் சிறியது என்பதால், இன்றைய போட்டியில் பேட்டிங்கில் வலுசேர்க்கும் விதமாக பியூஷ் சாவ்லா நீக்கப்பட்டு கேதர் ஜாதவ் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. சிஎஸ்கே அணி வின்னிங் டீம் காம்பினேஷனை மாற்ற விரும்பாது என்றாலும், ஷார்ஜா மைதானத்தை கருத்தில்கொண்டு மாற்றம் செய்யப்படலாம்.
undefined
சிஎஸ்கே அணியின் உத்தேச ஆடும் லெவன்:டுப்ளெசிஸ், சாம் கரன், ஷேன் வாட்சன், ராயுடு, தோனி(கேப்டன்,விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஜடேஜா, பிராவோ, கரன் ஷர்மா, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர்.
undefined
click me!