RR vs RCB: ஆர்சிபி அணியில் 2 அதிரடி மாற்றங்கள்.. ஸ்டீவ் ஸ்மித்தின் அதிரடி முடிவு

First Published Oct 17, 2020, 3:31 PM IST

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடுகிறது.
 

ஐபிஎல் 13வது சீசனில் இன்று 2 போட்டிகள் நடக்கின்றன. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் சிஎஸ்கேவும் மோதுகின்றன.
undefined
பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸும் ஆர்சிபியும் மோதுகின்றன. துபாயில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
undefined
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கியுள்ளது.
undefined
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), பென் ஸ்டோக்ஸ், ஸ்டீவ் ஸ்மித்(கேப்டன்), சஞ்சு சாம்சன், ராபின் உத்தப்பா, ரியான் பராக், ராகுல் டெவாட்டியா, ஷ்ரேயாஸ் கோபால், ஜோஃப்ரா ஆர்ச்சர், கார்த்திக் தியாகி, ஜெய்தேவ் உனாத்கத்.
undefined
ஆர்சிபி அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முகமது சிராஜுக்கு பதிலாக கூடுதல் பேட்ஸ்மேனாக குர்கீரத் சிங் மன்னும், ஷிவம் துபேவிற்கு பதிலாக ஷாபாஸ் அஹமதுவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
undefined
ஆர்சிபி அணி:ஆரோன் ஃபின்ச், தேவ்தத் படிக்கல், விராட் கோலி(கேப்டன்), டிவில்லியர்ஸ்(விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், கிறிஸ் மோரிஸ், ஷிவம் துபே, இசுரு உடானா, நவ்தீப் சைனி, முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.
undefined
click me!