இந்த மாற்றத்தை மட்டும் செஞ்சு பாருங்க; வெற்றி உங்கள் வசம்.. சிஎஸ்கேவிற்கு முன்னாள் வீரரின் அதிரடி ஆலோசனை

First Published Oct 23, 2020, 3:20 PM IST

சிஎஸ்கே அணி வெற்றி பெற அந்த அணியில் செய்ய வேண்டிய மாற்றம் குறித்த ஆலோசனையை முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசன் சிஎஸ்கே அணிக்கு கொடுங்கனவாக அமைந்துவிட்டது. ஆடிய அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்ற ஒரே அணி என்ற சாதனைக்கு சொந்தக்கார சிஎஸ்கே அணி, இந்த சீசனில் அந்த பெருமையை இழக்கிறது.
undefined
இந்த சீசனில் இதுவரை ஆடிய 10 போட்டிகளில் வெறும் 3 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் சிஎஸ்கே அணி, எஞ்சிய 4 போட்டிகளிலும் வென்றாலும், பிளே ஆஃபிற்கு செல்லும் வாய்ப்பு, மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியை பொறுத்தே அமையும். இந்த சீசனில் கிட்டத்தட்ட பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்.
undefined

Latest Videos


அதுமட்டுமல்லாது எஞ்சிய 4 போட்டிகளில் சிஎஸ்கே எதிர்கொள்ளவுள்ள அணிகள், மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, கேகேஆர், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகும். எனவே சிஎஸ்கேவின் வெற்றி எளிதல்ல.
undefined
இந்நிலையில், இன்று சிஎஸ்கே அணி மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்ளவுள்ள நிலையில், அந்த அணியில் செய்யப்பட வேண்டிய மாற்றம் குறித்த ஆலோசனையை வழங்கியுள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா.
undefined
சிஎஸ்கே அணி குறித்து தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோவில் பேசிய ஆகாஷ் சோப்ரா, சிஎஸ்கே அணி பிளே ஆஃபிற்கு முன்னேறும் வாய்ப்பு அந்த அணியின் கைகளில் மட்டுமல்ல. மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியை பொறுத்தும் இருக்கிறது. ஆனாலும் கணித முறைப்படி, இன்னும் சிஎஸ்கேவிற்கான பிளே ஆஃப் வாய்ப்பு உயிர்ப்புடன் இருக்கிறது. ஆனால் வாழ்வா சாவா போட்டியில் மும்பை இந்தியன்ஸை சிஎஸ்கேவால் வீழ்த்த முடியுமா..?
undefined
சிஎஸ்கே அணி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்போகிறது என்றால், என்னுடைய தேர்வு கண்டிப்பாக ஜெகதீஷனாக இருப்பார். ஜெகதீஷன் தனக்கு கிடைத்த ஒரேயொரு வாய்ப்பில் அருமையாக பேட்டிங் ஆடினார். மேலும் கேதர் ஜாதவை நீக்கிவிட்டு கூடுதலாக ஒரு பவுலரை ஆடவைக்க வேண்டும்.
undefined
மற்றபடி, சிஎஸ்கே அணியில் வேறு எந்த மாற்றமும் செய்யப்பட தேவையில்லை. டெக்னிக்கலாக இன்னும் பிளே ஆஃப் வாய்ப்பு சிஎஸ்கேவிற்கு உள்ளது. இந்த ஒரு போட்டியில் இந்த மாற்றங்களை மட்டும் செய்து, மற்றவர்களை அப்படியே ஆடவைக்கலாம். இதிலும் தோற்றுவிட்டால், பிளே ஆஃப் வாய்ப்பு சுத்தமாக இல்லை என்பதால் அடுத்த போட்டிகளில் எந்தவிதமான மாற்றங்களையும் செய்யலாம் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
undefined
click me!