IRCTC: ₹250 இல்லை... இனி ₹500! டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணித்தால் காத்திருக்கும் அதிரடி அபராதம்

Published : Jun 28, 2026, 11:40 AM IST

Indian Railways | ரயிலில் டிக்கெட் இல்லாமல் ஏறினால் இனி அதற்கான விலை அதிகம்! இதுவரை ரூ.250 ஆக இருந்த குறைந்தபட்ச அபராதம் தற்போது ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளதால், ஒரு சிறிய அலட்சியம் கூட உங்கள் பயணச் செலவை பல மடங்கு அதிகரிக்கச் செய்யலாம். 

PREV
15
டிக்கெட் இல்லாமல் ரயில் பயணம்..?

ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்பவர்களுக்கு இந்திய ரயில்வே அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுவரை குறைந்தபட்சமாக ₹250 ஆக இருந்த அபராதம், தற்போது ₹500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய விதி 2026 ஜூன் 20 முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்த மாற்றம் Jan Vishwas (Amendment of Provisions) Act, 2026-ன் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் டிக்கெட் இல்லாமல் பயணிப்பது மட்டுமல்லாமல், பயன்படுத்தப்பட்ட (Used Ticket), செல்லுபடியாகாத (Invalid Ticket) அல்லது தவறான டிக்கெட்டுடன் பயணம் செய்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

25
யாருக்கெல்லாம் இந்த அபராதம் பொருந்தும்?

புதிய விதிகளின்படி கீழ்க்கண்ட சூழ்நிலைகளில் சிக்கினால் அபராதம் விதிக்கப்படும்:

டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வது

பயன்படுத்தப்பட்ட டிக்கெட்டை மீண்டும் பயன்படுத்துவது

செல்லுபடியாகாத அல்லது தவறான டிக்கெட்டுடன் பயணம் செய்வது

பயணிக்க வேண்டிய வகுப்பிற்கு (Class) பொருந்தாத டிக்கெட்டைப் பயன்படுத்துவது உள்ளிட்ட விதிமீறல்கள்.

35
₹500 மட்டும் செலுத்தினால் போதுமா?

இல்லை. பலர் நினைப்பது போல ₹500 மட்டும் கட்டினால் விடுவிக்கப்பட மாட்டார்கள்.

டிக்கெட் பரிசோதகர் (TTE) பிடித்தால்,

பயணித்த தூரத்திற்கான முழு கட்டணத்தையும் (Actual Fare),

அதனுடன் குறைந்தபட்சம் ₹500 கூடுதல் அபராதத்தையும் (Excess Charge) செலுத்த வேண்டும்.

சில சந்தர்ப்பங்களில், பயண சூழ்நிலையைப் பொறுத்து செலுத்த வேண்டிய மொத்த தொகை ₹500-ஐ விட அதிகமாக இருக்கலாம்.

45
அபராதம் செலுத்த மறுத்தால் என்ன ஆகும்?

ரயில்வே அதிகாரிகள் கேட்கும் அபராதத்தை செலுத்த மறுத்தாலோ அல்லது தவிர்த்தாலோ, சம்பந்தப்பட்ட நபர் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும். சட்டப்படி 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது கூடுதல் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

55
ஏன் இந்த மாற்றம்?

நாட்டில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். டிக்கெட் இல்லாத பயணத்தால் ரயில்வேக்கு ஆண்டுதோறும் கணிசமான வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்தவும், சட்டப்படியான பயணத்தை ஊக்குவிக்கவும், ஒழுங்கை மேம்படுத்தவும் இந்த அபராதம் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பயணிகளுக்கு ரயில்வே அறிவுரை

ரயிலில் ஏறும் முன்பே செல்லுபடியாகும் டிக்கெட்டை பெற்றுக்கொள்வது அவசியம். டிக்கெட் இல்லாமல் அல்லது தவறான டிக்கெட்டுடன் பயணம் செய்வது இனி மிகவும் செலவான தவறாக மாறக்கூடும். பயணத்தின் போது டிக்கெட்டை பாதுகாப்பாக வைத்திருப்பதுடன், ரயில்வே விதிகளை முழுமையாக பின்பற்றுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories