ரைஹான் வத்ரா குடும்பத்துக்கும், அவிவா பெய்க் குடும்பத்துக்கும் ஏற்கெனவே நெருக்கம் உண்டு. இதனால் இருவரும் இயல்பாகவே காதல் வயப்பட்ட நிலையில், வருங்கால மனைவியை போன்று ரைஹான் வத்ராவுக்கும் புகைப்படங்கள் எடுப்பதில் தீராத காதல் இருந்து வந்தது.
காங்கிரஸ் பொதுச்செயலாளரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமாக இருந்து வருபவர் பிரியங்கா காந்தி. இவரும், தொழில் அதிபர் ராபர்ட் வதோராவும் 1997ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ரைஹான் வத்ரா என்ற மகனும், மிராயா வத்ரா என்ற மகளும் உள்ளனர்.
இந்த நிலையில், பிரியங்கா காந்தியின் மகனான 25 வயதான ரைஹான் வத்ராவுக்கும், அவரது நீண்ட நாள் காதலியான அவிவா பெய்க்குக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரைஹான் வத்ராவும், அவிவா பெய்க்கும் பல ஆண்டுகள் காதலித்து டேட்டிங் செய்து வந்தனர். இருவரின் காதலுக்கும் இரு வீட்டிலும் பச்சைக்கொடி காட்டினார்கள். இதனைத் தொடர்ந்து இருவரும் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாகவும் இன்னும் சில மாதங்களில் திருமணமும் நடைபெற உள்ளதாகவும் தகவல வெளியாகி உள்ளது.
34
யார் இந்த அவிவா பெய்க்?
நேரு குடும்பத்தில் மருமளாகப் போகும் 25 வயதான அவிவா பெய்க் டெல்லியைச் சேர்ந்த ஒரு புகைப்படக் கலைஞர் ஆவார். இவர் புகைப்பட ஸ்டுடியோ மற்றும் தயாரிப்பு நிறுவனமான அட்லியர் 11 இன் இணை நிறுவனராக இருந்து வருகிறார்.
டெல்லியின் பரகாம்பா சாலையில் உள்ள மாடர்ன் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த அவிவா பெய்க், சோனிபட்டில் உள்ள OP ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தில் பத்திரிகை மற்றும் தகவல் தொடர்பு துறையில் பட்டப்படிப்பு பெற்றுள்ளார்.
ரைஹான் வத்ரா குடும்பத்துக்கும், அவிவா பெய்க் குடும்பத்துக்கும் ஏற்கெனவே நெருக்கம் உண்டு. இதனால் இருவரும் இயல்பாகவே காதல் வயப்பட்ட நிலையில், வருங்கால மனைவியை போன்று ரைஹான் வத்ராவுக்கும் புகைப்படங்கள் எடுப்பதில் தீராத காதல். இவர்கள் இருவரும் இணைந்து டெல்லியில் புகைப்படக் கண்காட்சியை நடத்தியுள்ளனர். அரசியலில் ஆர்வம் காட்டாத ரைஹான் வத்ரா, ஒரு புகைப்பட நிறுவனமும் நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.