பாஜகவின் தேசியத் தலைவராக 46 வயதான நிதின் நபின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாஜக தேசியத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் இன்று நடந்த நிலையில், நிதின் நபின் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனால் அவர் போட்டியின்றி ஒருமனதாக பாஜகவின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
நிதின் நபினுக்கு ஆதரவாக 37 செட் வேட்புமனுக்கள் பெறப்பட்டதைத் தொடர்ந்து, பாஜக தேசியத் தலைவர் பதவிக்கு அவர் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக பாஜக தலைவர் கே. லட்சுமணன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
பாஜகவின் தேசிய தேர்தல் அதிகாரியான லட்சுமணன், 36 மாநிலங்களில் 30 மாநிலத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, கட்சியின் தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறை தொடங்கப்பட்டது என்றார்.