சம்பள கணக்குல இவ்வளவு பலன்களா? மத்திய அரசு ஊழியர்கள் இனி ராஜாதான்.. நிதி அமைச்சகம் அதிரடி அறிவிப்பு!

Published : Jan 19, 2026, 05:25 PM IST

மத்திய அரசு ஊழியர்களுக்காக Composite Salary Account' என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஜீரோ பேலன்ஸ், குறைந்த வட்டியில் கடன், பிரீமியம் கார்டுகள், ரூ.2 கோடி வரையிலான காப்பீடு போன்ற பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.

PREV
14
அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! இனி உங்கள் சம்பளக் கணக்கு (Salary Account) என்பது வெறும் பணத்தைப் பெறும் இடமாக மட்டுமல்லாமல், ஏகப்பட்ட சலுகைகளை அள்ளித்தரும் ஒரு பொக்கிஷமாக மாறப்போகிறது.

மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிதிச் சேவைகள் துறை (DFS), பொதுத்துறை வங்கிகளுடன் இணைந்து 'Composite Salary Account' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் விவரங்களை விரிவாகப் பார்க்கலாம்.

24
குறைந்த வட்டி.. கூடுதல் சலுகை!

• ஜீரோ பேலன்ஸ் (Zero Balance): ஊழியர்களின் சம்பளக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

• கடன் சலுகைகள்: வீடு, கல்வி, வாகனம் மற்றும் தனிநபர் கடன்களுக்கு வழக்கத்தை விடக் குறைவான வட்டி விகிதம் வசூலிக்கப்படும். மேலும், இதற்கான பரிசீலனை கட்டணங்கள் (Processing fees) முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படலாம் அல்லது குறைக்கப்படலாம்.

• பிரீமியம் கார்டுகள்: ரூபே பிளாட்டினம் (RuPay Platinum) அல்லது செலக்ட் போன்ற உயர்ரக டெபிட்/கிரெடிட் கார்டுகள் வழங்கப்படும். இதற்கு வருடாந்திர பராமரிப்பு கட்டணம் கிடையாது. விமான நிலையங்களில் உள்ள 'லவுஞ்ச்' (Lounge Access) வசதியையும் இலவசமாகப் பயன்படுத்தலாம்.

34
கோடிகளில் காப்பீடு

இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம், கணக்கு வைத்திருப்பவருக்குத் தரப்படும் பிரம்மாண்ட காப்பீடு ஆகும்:

• விபத்துக் காப்பீடு: விபத்தினால் உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ.1.5 கோடி வரையிலும், விமான விபத்தாக இருந்தால் ரூ.2 கோடி வரையிலும் காப்பீடு கிடைக்கும்.

• ஊனமுற்றோருக்கான இழப்பீடு: நிரந்தர அல்லது பகுதி ஊனம் ஏற்பட்டால் ₹1.5 கோடி வரை காப்பீடு வழங்கப்படும்.

• ஆயுள் காப்பீடு: ₹20 லட்சம் வரை டேர்ம் இன்சூரன்ஸ் (Term Life Insurance) உண்டு. விருப்பப்பட்டால் கூடுதல் தொகையைச் செலுத்தி இதை அதிகரித்துக் கொள்ளலாம்.

44
யார் யாருக்குக் கிடைக்கும்?

இந்தச் சலுகைகள் மத்திய அரசின் குரூப் A, B மற்றும் C ஆகிய அனைத்துப் பிரிவுகளில் உள்ள ஊழியர்களுக்கும் பொருந்தும். பொதுத்துறை வங்கிகள் மூலம் இந்தச் சலுகைகள் வழங்கப்படும். ஊழியர்கள் தங்கள் தற்போதைய சம்பளக் கணக்கை இந்தப் புதிய முறைக்கு மாற்றிக் கொள்ளவும் வங்கிகள் உதவி செய்யும்.

முன்பு தனித்தனியாக இன்சூரன்ஸ் பாலிசிகள் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்குச் செலவு செய்த ஊழியர்களுக்கு, இனி ஒரே கணக்கில் அனைத்து நன்மைகளும் இலவசமாகக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories