இதேபோல, கர்நாடகா பாஜக மாநிலத் தலைவர் விஜயேந்திராவின் வாகனமும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டிருந்தது. இதில் சீட் பெல்ட் அணியாதது, அதிவேகம், சிக்னல் ஜம்ப் போன்ற பத்து விதிமீறல்கள் அடங்கும். அவரது அலுவலகம் 2020 முதல் நிலுவையில் இருந்த ரூ. 3,250 அபராதத்தை இந்த 50% தள்ளுபடி திட்டத்தின் மூலம் செலுத்தியுள்ளது.
கர்நாடக அரசு ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 12 வரை, நிலுவையில் உள்ள போக்குவரத்து அபராதங்களுக்கு 50% தள்ளுபடி திட்டத்தை அறிவித்துள்ளது. பெங்களூரு நகரில் மட்டும் 2019 முதல் 2025 வரை சுமார் ரூ. 1,000 கோடி மதிப்பிலான 3 கோடி போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம் சனிக்கிழமை வரை, 16 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் தீர்க்கப்பட்டு, ரூ. 45 லட்சத்திற்கும் அதிகமான தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.