‘‘நான் எப்போதும் மோடியின் நண்பராக இருப்பேன். அவர் ஒரு சிறந்த பிரதமர். ஆனால் இந்த நேரத்தில் அவர் செய்யும் பணி எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால், இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே ஒரு சிறப்பு உறவு உள்ளது. கவலைப்பட ஒன்றுமில்லை.
பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிக்கை இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே மிகவும் நேர்மறையான அணுகுமுறையைக் கொண்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தொனி கடந்த சில நாட்களில் மாறிவிட்டதாகத் தெரிகிறது. இந்தியா மீது வரி விதித்த பிறகு, அவர் பிரதமர் மோடியை தனது சிறந்த நண்பர் என்றும், அவரை தலை சிறந்த பிரதமர் என்றும் புகழ்ந்து தள்ளினார். அதே நேரத்தில், பிரதமர் நரேந்திர மோடி இப்போது டிரம்பின் நட்பை பாராட்டி உள்ளார். இந்தியா-அமெரிக்க உறவுகள் குறித்த டிரம்பின் நேர்மறையான அறிக்கைகளை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். டிரம்பின் உணர்வுகளை ஆழமாகப் பாராட்டுவதாகவும், அவரை முழுமையாக ஆதரிப்பதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
24
நான் எப்போதும் மோடியின் நண்பர்
‘‘அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எப்போதும் எங்களின் நண்பர்களாக இருப்பார்.இந்தியாவும் அமெரிக்காவும் ஒரு சிறப்பு உறவைப் பகிர்ந்து கொள்கின்றன. ஜனாதிபதி டிரம்பின் உணர்வுகளையும், எங்கள் உறவுகள் குறித்த நேர்மறையான மதிப்பீட்டையும் ஆழமாகப் பாராட்டுகிறேன், முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். இந்தியாவும், அமெரிக்காவும் மிகவும் நேர்மறையான, எதிர்கால நோக்குடைய விரிவான, உலகளாவிய முக்கிய கூட்டாண்மையைக் கொண்டுள்ளன" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நேற்று டிரம்ப் ‘‘நான் எப்போதும் மோடியின் நண்பராக இருப்பேன். அவர் ஒரு சிறந்த பிரதமர். ஆனால் இந்த நேரத்தில் அவர் செய்யும் பணி எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால், இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே ஒரு சிறப்பு உறவு உள்ளது. கவலைப்பட ஒன்றுமில்லை. சில நேரங்களில் இதுபோன்ற தருணங்கள் தானாகவே வரும்’’ எனத் தெரிவித்து இருந்தார்.
34
பழைய புகைப்படத்தை வெளியிட்ட டிரம்ப்
முன்னதாக, டிரம்ப் ஒரு சமூக ஊடகப் பதிவில், ‘‘இந்தியாவையும், ரஷ்யாவையும் ஆழமான, இருண்ட சீனாவிடம் இழந்துவிட்டோம். கடவுள் அவர்களுக்கு நீண்ட, வளமான எதிர்காலத்தை வழங்கட்டும்’’ என்று பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் இருக்கும் பழைய புகைப்படத்தையும் டிரம்ப் வெளியிட்டார்.
சில சமயங்களில் அவர் இந்தியாவை இழந்ததற்கு வருத்தத்தை வெளிப்படுத்தி இருந்தாலும், சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புஉச்சிமாநாட்டிற்குப் பிறகு டிரம்பின் அணுகுமுறை மாறத் தொடங்கியுள்ளது. அதே நேரத்தில், அவர் தனது பேச்சுவார்த்தைகளில் அச்சுறுத்தலையும் வெளிப்படுத்துகிறார். ஒட்டுமொத்தமாக, அமெரிக்க வரி விதிப்பு குறித்து இந்தியா எந்த எதிர்வினையும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில், ரஷ்யாவில் இருந்து எண்ணெய் கொள்முதல்களும் தொடர்கின்றன. டிரம்ப் இப்போது இந்தியாவை இழக்க பயப்படுவதற்கு இதுவே காரணம்.