விநாயகர் ஊர்வலத்தின்போது குண்டுவெடிப்பு நடைபெறும் என மும்பை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் வந்ததை அடுத்து, மிரட்டல் விடுத்த நபர் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த அஸ்வின் குமார் சுப்ரா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி எச்சரிக்கை வந்தது. அதில் விநாயகர் ஊர்வலத்தின்போது பெரும் குண்டுவெடிப்பு நடைபெறும் எனவும் 34 வாகனங்களில் மனித குண்டுகள் தயாராக இருப்பதாகவும், இந்த குண்டு வெடிப்பு மும்பையையே அதிரச் செய்யும் என்றும் 'லஷ்கர்-இ-ஜிஹாதி' அமைப்பின் பெயரை குறிப்பிட்டு எச்சரிக்கை செய்யப்பட்டது.
மேலும் 14 பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைந்துள்ளனர் என்றும், மொத்தம் 400 கிலோ RDX வெடிகுண்டு பொருட்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த தகவலால் நாடே அதிர்ச்சி அடைந்து.
23
அலர்ட்டான போலீஸ்
மும்பை முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் இறங்கினர். சந்தேகத்திற்கு உரிய வாகனங்கள் சோதனை செய்யப்பட்டது. பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) மற்றும் பிற அமைப்புகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட் தமிழகத்திலும் பல இடங்களிலும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.
இதனிடையே மும்பை கட்டுப்பாட்டு அறையின் அதிகாரப்பூர்வ WhatsApp எண்ணுக்கு வந்த மர்ம மிரட்டல் எண் யாருடையது என விசாரணை நடத்தப்பட்டது. இதனையடுத்து போலீசாரின் தீவிர விசாரணையில் மும்பையில் குண்டுவெடிப்பு மிரட்டல் விடுத்ததாக உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த 50 வயது அஸ்வின் குமார் சுப்ரா என்பவரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
33
உ.பி நபரை தட்டித்தூக்கிய போலீஸ்
குண்டு வெடிப்பு மிரட்டல் அனுப்பப் பயன்படுத்தப்பட்ட தொலைபேசி மற்றும் சிம் கார்டு மூலம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து விசாரணைக்காக சுப்ரா மும்பைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். மும்பை நகரில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது குண்டு வெடிக்கும் என மிரட்டியது ஏன்.? அஸ்வின் குமார் சுப்ரா யார்.? இவர் பின்னனியில் யார் உள்ளனர் என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.