ராஜஸ்தான், குஜராத், ஹரியானா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா, சத்தீஸ்கர், தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் வடக்குப் பகுதிகள் ஆகியவை இயல்பை விட அதிகமான வெப்ப அலை நாட்களைக் காண வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எல் நினோ–தெற்கு அலைவு அடுத்த மூன்று மாதங்களுக்கும், பருவமழைக் காலத்திலும் நடுநிலையாக இருக்கும் என்றும் எல் நினோ உருவாக வாய்ப்பே இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் மழைப்பொழிவைப் பொறுத்தவரை வடமேற்கு இந்தியா, மேற்கு மத்திய இந்தியா, தீபகற்ப இந்தியா மற்றும் வடகிழக்கு இந்தியாவின் பல பகுதிகளில் இயல்பானது முதல் இயல்பானதை விட அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.