சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் வெளியீடு!

சிபிஎஸ்இ 2025-26 கல்வியாண்டிற்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் புதிய பாடத்திட்டத்தை வெளியிட்டுள்ளது. தேர்வு நடைமுறையில் மாற்றங்கள், திறன் கல்விக்கு முக்கியத்துவம், மற்றும் கருத்தியல் புரிதலுக்கு அழுத்தம் ஆகியவை இதில் அடங்கும்.

CBSE reforms

சிபிஎஸ்இ (CBSE) 2025-26 கல்வியாண்டிற்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் புதிய பாடத்திட்டத்தை வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய பாடத்திட்டங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbse.gov.in இல் கிடைக்கின்றன.

சிபிஎஸ்இ புதிய பாடத்திட்டத்தின்படி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடங்களைக் கற்பிக்குமாறு பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ''பாடங்கள் பரிந்துரைகளுக்கு இணைக்கமான முறையில் கற்பிக்கப்பட வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

CBSE new syllabus 2025-26

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10 மற்றும் 12 ஆம் வகுப்பு புதிய பாடத்திட்டம் 2025-26 பாடங்களின் உள்ளடக்கம் மற்றும் கற்றல் முடிவுகள் குறித்த விரிவான வழிகாட்டுதல்களை வழங்குகிறது.

புதிய பாடத்திட்டம் கற்றல் விளைவுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மாணவர்கள் தங்கள் கல்வித் திறன்களை மேம்படுத்த புதிய வாய்ப்புகளை வழங்குகிறது. கல்வி முறையை மேம்படுத்த பல்வேறு சீர்திருத்தங்களும் முன்மொழிப்பட்டுள்ளன.


CBSE syllabus changes

CBSE புதிய பாடத்திட்டத்தில் முக்கிய மாற்றங்கள்:

இந்த ஆண்டு, 10ஆம் வகுப்பு தேர்வு நடைமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைச் செய்துள்ளது. இந்த ஆண்டு முதல், சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை, பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறும். இது மாணவர்களுக்கு அவர்களின் மதிப்பெண்களை மேம்படுத்த அதிக வாய்ப்புகளைத் தருகிறது.

மனப்பாடம் செய்வதைவிட, திறன் சார்ந்த கேள்விகள் மூலம் கருத்தியல் புரிதலுடன் அறிவைப் பயன்படுத்துவதை இந்தப் பாடத்திட்டம் வலியுறுத்துகிறது. மதிப்பீட்டில் அதிக வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக சிபிஎஸ்இ மறுமதிப்பீட்டு செயல்முறையையும் சீர்திருத்தியுள்ளது.

CBSE matric exams 2025-26

இது தவிர, திறன் கல்விக்கு வாரியம் முக்கியத்துவம் அளித்துள்ளது. 12ஆம் வகுப்பில் சுற்றுலா, செயற்கை நுண்ணறிவு, புவிசார் தொழில்நுட்பம், நிதி, வணிகம், சில்லறை விற்பனை மற்றும் காப்பீடு போன்ற வளர்ந்துவரும் பல்வேறு துறைகளில் திறன் சார் கல்வி வழங்கப்படும்.

12ஆம் வகுப்பிற்கான குரூப் ஏ பாடத்தில் பயன்பாட்டு கணிதம் புதிய தேர்வுப் பாடமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வாரியம் ஓ.எஸ்.எம். (OSM) மற்றும் புதிய மறு மதிப்பீட்டு முறையைச் செயல்படுத்தும்.

CBSE School Students

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பாடத்திட்டம் 9 புள்ளிகள் கொண்ட தர நிர்ணய முறையை அடிப்படையாகக் கொண்டது. மொத்தம் 80 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும். கட்டாயப் பாடங்களுக்கான உள் மதிப்பீட்டிற்கு கூடுதலாக 20 மதிப்பெண்கள் வழங்கப்படும். 2025 தேர்வுகளில் தேர்ச்சி பெற, மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் 33% மதிப்பெண்களைப் பெற வேண்டும்.

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 17, 2026 முதல் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும். இதில் சுமார் 20 லட்சம் மாணவர்கள் எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CBSE elective

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மின்னணுவியல் மற்றும் வன்பொருள், உடல் செயல்பாடு பயிற்சி, வடிவமைப்பு சிந்தனை, உள்ளிட்ட புதிய திறன் சார்ந்த விருப்பப் பாடங்களையும் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது.

2025-26 கல்வியாண்டிலிருந்து 12 ஆம் வகுப்பு கணக்கியல் மாணவர்கள் தேர்வுகளில் பேசிக் கால்குலேட்டர்களை பயன்படுத்த வாரியம் அனுமதித்துள்ளது.

புதிய பாடத்திட்டம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பைக் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பார்க்கவும்.

https://docs.google.com/viewerng/viewer?url=https://cbseacademic.nic.in/web_material/Circulars/2025/14_Circular_2025.pdf

Latest Videos

click me!