மியான்மர், தாய்லாந்து நிலநடுக்கம்; இந்தியா உதவ தயார் என பிரதமர் மோடி அறிவிப்பு!

மியான்மர், தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஏராளமான மக்கள் பாதைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா உதவ தயாராக இருப்பதாக பிரதமர் மோடி அறிவித்துளளார்.
 

Powerful Earthquake Hits Myanmar India Ready to Provide Assistance Says PM Modi mma

மியான்மர், தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவவும் ஆதரவளிக்கவும் இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார் (India ready to help). மேலும் இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்வதாகவும், மியான்மர், தாய்லாந்து அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள வெளியுறவு அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

மியான்மர் தாய்லாந்து நிலநடுக்கம்

மியான்மரில் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவான நிலநடுக்கத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.(Terrible earthquake in Myanmar)  இன்று பகல் 12.50 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து 6.8 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நிலநடுக்கம் எப்படி ஏற்படுகிறது? எந்த அளவு பூகம்பம் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்?
 


நிலநடுக்கம் காரணமாக ரயில் சேவை நிறுத்தம்

மாண்டேலேயில் இருந்து 17.2 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தாய்லாந்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலநடுக்கம் காரணமாக பாங்காக்கிலும், சீனாவின் யுனான் மாகாணத்திலும் மெட்ரோ, ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. 
 

பரபரப்பு வீடியோ

இதனிடையே நிலநடுக்கம் தொடர்பான அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. கட்டப்பட்டு வந்த பல மாடி கட்டிடம், வீடுகள் உள்ளிட்டவை தரைமட்டமாகும் காட்சிகள் வெளியாகியுள்ளன. மக்கள் அலறி அடித்து ஓடும் காட்சிகளும் அதில் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாங்காக், மியான்மர் நிலநடுக்கம்; 55 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

Latest Videos

vuukle one pixel image
click me!