ஒரு பயணியின் டிக்கெட் மூலம் ரயில்வேக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் தெரியுமா?

இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் மூலம் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் பயணிக்கிறார்கள். இந்திய ரயில்வேவுக்கு ஒரு பயணியின் டிக்கெட் மூலம் எவ்வளவு வருமானம் வருகிறது? என்பது குறித்து பார்க்கலாம்.

Do you know how much profit Indian Railways makes on a single ticket? ray

 Indian Railways Ticket Revenue: இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பல லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்வதால் இந்திய ரயில்வேயின் வருமானம் அதிகமாக இருக்கும். பயணிகள் மூலம் வருவதை விட சரக்கு போக்குவரத்து மூலம் ரயில்வே அதிகம் சம்பாதிக்கிறது. டிக்கெட்டுகள் மூலம் இந்திய ரயில்வே எவ்வளவு வருமானம் ஈட்டுகிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இது குறித்து விரிவாக பார்ப்போம். 

Do you know how much profit Indian Railways makes on a single ticket? ray
Indian Railway

இந்திய ரயில்வேயில் ஒவ்வொரு நாளும் சுமார் 2.5 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். இந்த பயணிகளின் பயணத்தை எளிதாக்க, ரயில்வே ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான ரயில்களை இயக்குகிறது. அவ்வப்போது, ரயில்வே தனது நெட்வொர்க்கை மேம்படுத்துகிறது. இதில் பிரீமியம் ரயில்களை இயக்குகிறது. வந்தே பாரத் இதற்கு மிகப்பெரிய உதாரணம். இந்த ரயில்கள் மூலம் ரயில்வேக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. 2021-22 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட வர்த்தக அமைச்சகத்தின் அறிக்கையின்படி, ரயில்வே ஒரு நாளைக்கு ரூ.400 கோடி வருமானம் ஈட்டுகிறது. இதில் பெரும்பாலானவை ரயில் பயணிகள் டிக்கெட்டுகளில் இருந்து வருகிறது. சரக்கு போக்குவரத்து மூலம் கிடைக்கும் வருமானமும் இதில் அடங்கும்.


Indian Railway Revenue

ரயில்களை இயக்க இந்திய ரயில்வே ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான ரூபாயை செலவு செய்கிறது. இதில் எரிபொருள், ஊழியர் சம்பளம், பராமரிப்பு, உள்கட்டமைப்பு போன்ற செலவுகள் அடங்கும். இந்த செலவை ஈடுகட்ட, ரயில்வே பயணிகள் டிக்கெட்டுகளில் இருந்து பணம் சம்பாதிக்கிறது. சேவை கட்டணம், உள்கட்டமைப்பு பராமரிப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்ற அனைத்து செலவுகளும் பயணிகள் டிக்கெட்டுகளின் மீது வசூலிக்கப்படுகின்றன.

தாம்பரத்தில் ரயில் தடம்புரண்டு விபத்து! ரயில் சேவையில் பாதிப்பா? முழு விவரம்!

Express Trains Revenue

டிக்கெட் மூலம் கிடைக்கும் வருமானம் ரயில் வகை, தூரத்தைப் பொறுத்து மாறுபடும். மதிப்பீடுகளின்படி, ரயில்வே சாதாரண மெயில் அல்லது எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து ஒரு நபருக்கு ரூ.40 முதல் ரூ.50 வரை சம்பாதிக்கிறது. அதே நேரத்தில், ராஜ்தானி, சதாப்தி அல்லது வந்தே பாரத் போன்ற பிரீமியம் ரயில்களில் லாபம் அதிகரிக்கும். இதுபோன்ற ரயில்களில் பயணம் செய்பவர்களிடம் இருந்து இந்திய ரயில்வே ஒரு பயணிக்கு ரூ.100 முதல் ரூ.500 வரை சம்பாதிக்கிறது.

Train Ticket Cancel Revenue

இந்திய ரயில்வேக்கு கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதி டிக்கெட் ரத்து செய்வதன் மூலமும் வருகிறது. பலர் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பிறகு எதிர்பாராத காரணங்களால் டிக்கெட்டுகளை ரத்து செய்கிறார்கள். ரயில்வே விதிகளின்படி, RAC அல்லது வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டை ரத்து செய்தால், திரும்பப் பெறும் தொகையில் ரூ.60 குறைக்கப்படும். மறுபுறம், ரயில் புறப்படும் நேரத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை ரத்து செய்தால், முதல் ஏசியில் ரூ.240, இரண்டாவது ஏசியில் ரூ.200, மூன்றாவது ஏசியில் ரூ.180, ஸ்லீப்பர் வகுப்பில் ரூ.120, இரண்டாவது வகுப்பில் ரூ.60 பிடித்தம் செய்யப்படும். இவை அனைத்தும் ரயில்வேக்கு அதிக வருமானம் ஈட்டித் தருவது குறிப்பிடத்தக்கது. 

தாம்பரம் டூ ராமேஸ்வரம் புதிய ரயில்! அண்ணாமலை கோரிக்கையை ஏற்ற ரயில்வே அமைச்சர்!

Latest Videos

vuukle one pixel image
click me!