சி.ஏ தேர்வு முறையில் அதிரடி மாற்றம்.! வெளியான புதிய அறிவிப்பு

Published : Mar 28, 2025, 07:23 AM ISTUpdated : Mar 28, 2025, 07:27 AM IST

பொறியியல், மருத்துவம் தவிர, அதிக வருவாய் தரும் சி.ஏ. படிப்பு குறித்து இங்கு காணலாம். இந்திய தணிக்கைத் துறையின் புதிய அறிவிப்பின்படி, சி.ஏ. தேர்வுகள் இனி மூன்று முறை நடைபெறும்.

PREV
14
சி.ஏ தேர்வு முறையில் அதிரடி மாற்றம்.! வெளியான புதிய அறிவிப்பு

Chartered accountant exam : பள்ளி கல்வியை முடிக்கும் மாணவர்கள் அதிகம் விரும்பி படிக்கும் படிப்பு பொறியியல், மருத்தும் மற்றும் கலை அறிவியல் ஆகும். ஆனால் அதனை விட அதிக வருவாயை தரக்கூடிய படிப்பாக இருப்பது  சி.ஏ எனப்படும் பட்டைய கணக்காளர் படிப்பாகும், 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர் இந்திய பட்டய கணக்கறிஞர்கள் கழகம் நடத்தும் சிஏ பவுண்டேஷன் என்ற தேர்வினை எழுதி படிப்பில் சேரலாம் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஒருவர் குறைந்தபட்சம் 4 அரை ஆண்டுகள் படிப்பின் மூலம் பட்டைய கணக்காளராக தேர்ச்சி அடைய முடியும்.

24

பட்டைய கணக்காளர் படிப்பு

இந்த  சி.ஏ எனப்படும் பட்டைய கணக்காளர் படிப்பிற்கு மாணவர்கள சேர கணக்கு, அக்கவுண்டன்சி, சட்டம், பொருளாதாரம் ஆகிய நான்கு பாடங்களில் தேர்வு எழுத வேண்டும். மேலும் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற தேர்வுகளை போன்று  மிகவும் கஷ்டமான தேர்வுகளில் ஒன்றாக இந்தத் தேர்வுகள் மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தேர்வில் நாட்டில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் தேர்வானாலும், தமிழக மாணவர்கள் ரேங்க் பட்டியலில் இடம்பெற முடிவதில்லை. குறிப்பாக அதிக தேர்ச்சி பெற்ற மாநிலமாக டெல்லி, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற வட மாநிலத்தைச் மாணவர்களே உள்ளனர்.

34
प्रतीकात्मक तस्वीर

இனி 3 கட்டங்களாக தேர்வு

இந்த நிலையில் மாணவர்களின் கூடுதல் வாய்ப்பு அளிக்கும் வகையில் முக்கிய அறிவிப்பை இந்திய தணிக்கை துறை அறிவித்துள்ளது. இதன் படி சி.ஏ. படிப்பில் மூன்று கட்டங்களுக்கான தேர்வுகள், இனி ஜனவரி, மே, செப்டம்பர் ஆகிய மூன்று முறை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன் படி ஜூன் மற்றும் டிசம்பர் ஆகிய இருமுறை நடத்தப்படும் இன்பர்மேஷன் சிஸ்டம் ஆடிட் என்ற தேர்வு, இனி மூன்று முறை நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது

44

இந்திய தணிக்கை துறை அறிவிப்பு

இதன் படி இந்த தேர்வுகள் பிப்ரவரி , ஜூன், அக்டோபர் ஆகிய மாதங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் வழங்கும் வகையில் 26 வது கவுன்சில் கூட்டத்தில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக இந்திய தணிக்கை துறை நிறுவனம் அறிவித்துள்ளது. 
 

Read more Photos on
click me!

Recommended Stories