உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தின் பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வாரணாசி மற்றும் பிரயாக்ராஜ் நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில், இன்று (8ம் தேதி) முதல் 12ம் தேதி வரையிலான 5 நாட்களுக்கு பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பல்வேறு மாநிலங்களில் மழை எச்சரிக்கை
ஆகஸ்ட் 8 முதல் 12 வரை உத்தரகண்ட், பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோல் ஹரியானா மற்றும் மேற்கு உத்தரபிரதேசத்தில் மிக கனமழை பெய்யக்க்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் ஹரியானா மற்றும் மேற்கு உத்தரபிரதேசத்தில் மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமின்றி பீகார் மற்றும் ஜார்க்கண்டிலும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.