இந்தியாவுக்குள்ளே இந்தியர்கள் செல்ல முடியாத 6 இடங்கள்.. அனுமதி முக்கியம் பிகிலு!

Published : Aug 07, 2025, 05:18 PM IST

இந்தியாவில் சில இடங்களுக்கு செல்ல இந்தியர்களாக நாமே அனுமதி பெற வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருக்க முடியாது. பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் அரசு விதிமுறைகளால் கட்டுப்படுத்தப்பட்ட இடங்கள் பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

PREV
15
இந்தியர்கள் செல்ல முடியாத இடங்கள்

லடாக் சுற்றுலா செல்ல திட்டமிட்டால், குறிப்பிட்ட பகுதிகளுக்கு உள்நாட்டு அனுமதிப் பத்திரம் (இன்னர் லைன் பெர்மிட்) பெற வேண்டும். ஏரிகள், பாதுகாப்பான எல்லைகள் போன்ற பகுதிகள், நுப்ரா வேலி, கார்’துங் லா பாஸ், சோ மோரிரி, பாங்கோங் ஏரி, டஹ், ஹனு கிராமம் போன்றவை இதில் அடங்கும். அனுமதிக்காக பாஸ் வழங்கப்படுகிறது. ரூ.30, உங்களின் அடையாளத்தின் நகல் ஆகியவை தேவைப்படும்.

25
லட்சத்தீவு

இந்தியாவின் அழகிய கடற்கரைத் தீவுகளில் ஒன்றான லட்சத்தீவுகளுக்கு செல்ல அனுமதி அவசியம். 36 தீவுகளுள் மிகக்குறைவான 10 தீவுகள் மட்டுமே சுற்றுலா பயணிகளுக்கு திறக்கப்பட்டுள்ளது. இங்கே செல்ல, அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், ரூ.50 ஆகியவை தேவை.

35
அருணாச்சல பிரதேசம்

அருணாச்சல பிரதேசத்தை ஒட்டியுள்ள பூடான், மியான்மார், சீனா எல்லையோரத்தில் அமைந்துள்ள பகுதிகள், தவாங், பொம்டிலா, பசிகாட், அனினி, ஜீரோ போன்ற இடங்களை காண இன்னர் லைன் அனுமதி தேவை. ரூ.100, அடையாள ஆவணம் மற்றும் புகைப்படம் வழங்கி 30 நாட்கள் செல்லுபடியாகும் அனுமதி பெறலாம்.

45
நாகலாந்து

நாகலாந்தின் சிறந்த இயற்கை மற்றும் பழங்குடி மக்களின் வாழ்க்கையை அனுபவிக்க கொஹிமா, டிமாப்பூர், மோக்கோக்சுங்க், மோன் போன்ற இடங்களுக்கு அனுமதி பெற வேண்டும். 5 நாட்களுக்கு ரூ.50, 30 நாட்களுக்கு ரூ.100 என்ற வகையில் அனுமதித்தணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

55
அனுமதி இல்லாத இடங்கள்

பங்களாதேஷ் மற்றும் மியான்மார் எல்லையில் அமைந்துள்ள மிசோரம் மாநிலத்துக்குச் செல்ல, தற்காலிக பாஸ் ரூ.120, நிரந்தர பாஸ் ரூ.220 செலவாகும். சிக்கிமில் உள்ள நாதுலா, யும்தாங், குருதொங்மார் ஏரி போன்ற பகுதிகளுக்குச் செல்ல அனுமதி தேவை. ஆனால் இங்கு கட்டணம் எதுவும் இல்லை. இந்த இடங்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

Read more Photos on
click me!

Recommended Stories