மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,“ தீபாவளி மற்றும் பண்டிகை தினங்களை முன்னிட்டு 11 லட்சத்து 72 ஆயிரத்து 240 ரயில்வே ஊழியர்களுக்கு அவர்களின் செயல் திறனை அங்கீகரிக்கும் வகையில் ரூ.2,029 கோடி போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரயில்வே ஊழியர்கள், லோகோ பைலட்டுகள், ரயில் மேலாளர்கள் (காவலர்கள்), ஸ்டேஷன் மாஸ்டர்கள், மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், பாயிண்ட்ஸ்மேன், அமைச்சரகப் பணியாளர்கள் மற்றும் பிற குரூப் சி ஊழியர்கள் என பல்வேறு வகை ரயில்வே ஊழியர்களுக்கு இந்தத் தொகை வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.