நவராத்திரியை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு!

First Published | Oct 1, 2024, 9:51 AM IST

நவராத்திரியை ஒட்டி மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்று வெளிவர வாய்ப்பு உள்ளது. அகவிலைப்படி உயர்வு மூலம் அவர்களின் சம்பளம் உயரப் போகிறது.

7th Pay Commission

2024 அக்டோபரில் அகவிலைப்படி (டிஏ) அறிவிப்புக்காக மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும், தீபாவளிக்கு முன் 3% முதல் 4% வரையிலான டிஏ உயர்வை அரசாங்கம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Salary hike

மத்திய அரசு அறிவிக்க இருகுகம் அகவிலைப்படி உயர்வு ஜூலை 1, 2024 முதல் அமலுக்கு வரும். இது மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கும். மேலும், ஜூலை மாதத்தில் இருந்து வரவேண்டிய அகவிலைப்படியின் நிலுவைத் தொகையும் சம்பளத்துடன் வரும்.

Tap to resize

DA Hike

ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் மாதத்திற்கு ரூ.18,000 எனில், 3% அதிகரிப்பு கிடைத்தால் அவரது சம்பளம் மாதத்திற்கு ரூ.540 அதிகரிக்கும். 4% அதிகரித்தால், சம்பளம் மாதத்திற்கு ரூ.720 அதிகரிக்கும். ஒருவரின் மொத்த சம்பளம் ரூ.30,000, அதில் ரூ.18,000 அடிப்படை ஊதியம் என்றால், தற்போதைய 50% அகவிலைப்படி அடிப்படையில், அவருக்கு ரூ.9,000 அகவிலைப்படியாகக் கிடைக்கும். அகவிலைப்படி 3% உயர்ந்தால், இது ரூ.9,540 ஆகவும், 4% என்றால் ரூ.9,720 ஆகவும் மாறும்.

Central Govt employees

அரசு ஊழியர்களுக்கு DA எனப்படும் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் DR எனப்படும் அகவிலை நிவாரணம் ஓய்வூதியதாரர்களுக்குக் கிடைக்கிறது. இரண்டும் ஆண்டுக்கு இரண்டு முறை ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் திருத்தப்படுகின்றன. அரசாங்கம் இது பற்றி எப்போது அறிவித்தாலும் ஜனவரி மற்றும் ஜூலை முதல் கணக்கிட்டு வழங்கப்படும். இம்முறை DA மற்றும் DR உயர்வால் ஒரு கோடிக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்று கருதப்படுகிறது.

Navratri bonus

அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI) அடிப்படையில் அகவிலைப்படி உயர்வு நிர்ணயம் செய்யப்படும். வழக்கமாக மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் AICPI அறிவிக்கப்படும். கடந்த 12 மாதங்களின் AICPI சராசரி அடிப்படையில் மத்திய அரசு அகவிலைப்படியைத் மாற்றி அறிவிக்கிறது.

Dearness Allowance

7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 2016 ஜனவரியில் இருந்து அமல்படுத்தப்பட்டு தற்போது 10 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. 8வது ஊதியக் குழு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை என்றாலும், விரைவில் அமைக்கப்படும் என ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Govt Employees Salary

இதுவரை வந்துள்ள தகவல்களின்படி, 8வது ஊதியக் குழுவில் குறைந்தபட்ச சம்பளம் ரூ.34,560 ஆகவும், ஓய்வூதியம் ரூ.17,280 ஆகவும் அதிகரிக்கலாம். 8வது ஊதியக் குழு குறித்து மத்திய அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை, ஆனால் விரைவில் அதுகுறித்து அறிவிக்கப்படும் என ஊழியர்கள் நம்புகின்றனர்.

Latest Videos

click me!