பசு மாட்டை ராஜ மாதாவாக அறிவித்த மகாராஷ்டிர அரசு! கலாச்சார அடையாளமாம்!

First Published | Sep 30, 2024, 2:44 PM IST

பசுவை மாநிலத்தின் ராஜ்ய மாதா என்று அறிவித்து மகாராஷ்டிர அரசு திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

cow

பசுவை ராஜ்ய மாதா என்று அறிவித்து மகாராஷ்டிர அரசு திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய பாரம்பரியத்தில் பசுக்களின் கலாச்சார முக்கியத்துவத்தை காரணம் காட்டி அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ உத்தரவில், பசுக்கள் இந்திய பாரம்பரியத்தின் ஒரு முக்கிய அங்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழங்காலத்திலிருந்தே ஆன்மீகம், அறிவியலில் மட்டுமின்றி ராணுவத்திலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் காணப்படும் பல்வேறு வகையான மாடுகள் குறித்து எடுத்துரைத்துள்ள மகாராஷ்டிரா அரசு, உள்நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறைவது குறித்து கவலை தெரிவித்திருக்கிறது.

விவசாயத்தில் பசுவின் சாணத்தைப் பயன்படுத்துவதன் மூலம் மனிதன் தனது பிரதான உணவில் ஊட்டச்சத்து பெறுகிறான் என்றும் பசு மற்றும் மூலம் கிடைக்கும் பொருள்கள் சமூக-பொருளாதார காரணிகளுடன் பிணைந்தவை என்று அரசின் அறிவிப்பு கூறுகிறது.

Latest Videos


பசுமாடுகளின் மத மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, கால்நடை வளர்க்கும் மக்கள் நாட்டு மாடுகளை வளர்க்க மகாராஷ்டிர மாநில அரசாங்கம் ஊக்கம் அளிக்கிறது.

இந்தியாவில் இந்து மதத்தில் பசுவுக்கு தாய் அந்தஸ்து வழங்கப்பட்டு வழிபடப்படுவது குறிப்பிடத்தக்கது. இது தவிர, அதன் பால், சிறுநீர், சாணம் ஆகியவை புனிதமாகக் கருதப்பட்டு, மிகுதியாகப் பயன்படுத்தப்படுகின்றன.

பசுவின் பால் மனித உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும், அதே நேரத்தில் மாட்டு சிறுநீர் பல நோய்களைக் குணப்படுத்துவதாகக் கூறப்படுகிறது என முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர அரசின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

click me!