இந்தியாவை பொறுத்தவரை ஒவ்வொரு நாளும், மில்லியன் கணக்கான பயணிகள் நாடு முழுவதும் பயணம் செய்ய இந்திய ரயில்வேயைப் பயன்படுத்துகின்றனர். ஒரு நாளைக்கு சுமார் 24 மில்லியன் பயணிகள் இந்திய ரயில்வேயை பயன்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி இருக்க, ரயில் பயணிகள் ஒரு ரயிலைத் தவறவிட்டால் என்ன செய்ய வேண்டும்? தவறவிட்ட ரயிலுக்கான டிக்கெட்டை வைத்து மாற்று ரயிலில் பயணிக்க முடியுமா? ரயில்வே விதிகள் என்ன சொல்கின்றன என்றுப பார்க்கலாம்.
Indian Railways
ரயிலை தவறவிடுவது பயணிகளின் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றாகும். ரயிலைத் தவறவிட்டால், பிறகு அதே டிக்கெட்டை வைத்து வேறு ரயிலில் பயணிக்க முடியுமா? ரயில்வேயின் விதிகளின்படி, ஒரு பயணி பொது கோச் டிக்கெட் வைத்திருந்தால், அவர் வேறு ரயிலில் பயணம் செய்யலாம்.
ஆனால், வந்தே பாரத், சூப்பர் பாஸ்ட், ராஜ்தானி எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்களில் பயணிகளிடம் முன்பதிவு டிக்கெட் இருந்தாலும், ஒருமுறை ரயிலைத் தவறவிட்டுவிட்டால், அதே டிக்கெட்டை வைத்துக்கொண்டு மற்றொரு ரயிலில் பயணம் செய்ய முடியாது. தவறுதலாகக் கூட அதே டிக்கெட்டைக் கொண்டு வேறு ரயிலில் பயணிக்க வேண்டாம், ஏனெனில் பிடிபட்டால் அபராதம் விதிக்கப்படலாம்.
ரயிலைத் தவறவிட்டால் பணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம். இதற்கு, IRCTC செயலியில் TDR பகுதியில் ஆப்ஷ் இருக்கும். அதில் தவறவிட்ட ரயிலுக்கான டிக்கெட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு ரயிலைத் தவறவிட்டதற்கான காரணத்தைக் குறிப்பிட்டு TDR தாக்கல் செய்ய வேண்டும். பரிசீலனைக்குப் பின் 60 நாட்களுக்குள் பணம் திரும்பக் கிடைக்கும்.
ரயில்வே விதிகளின்படி, உறுதிசெய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை புறப்படும் நேரத்திற்கு 48 மணி நேரம் முதல் 12 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால், மொத்தத் தொகையில் 25% வரை பிடித்தம் செய்யப்பட்டு மீதித் தொகை கிடைக்கும்.
ரயில் புறப்படுவதற்கு 12 மணி நேரம் முதல் 4 மணி நேரத்திற்குள் டிக்கெட்டை ரத்து செய்தால், டிக்கெட்டின் பாதித் தொகை, அதாவது 50% கழிக்கப்படும். மீதி திரும்பத் தரப்படும்.
காத்திருப்பு பட்டியல், RAC போன்ற நிலைகளில் இருக்கும் டிக்கெட்டுகளையும் ரத்து செய்தால் பணம் திரும்பக் கிடைக்கும். இந்தச் சூழ்நிலையில், ரயில் புறப்படும் நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்புவரை ரத்து செய்ய வாய்ப்பு உள்ளது. இதைவிடத் தாமதமானால், பணத்தைத் திரும்பப் பெற முடியாது.