Published : Sep 25, 2024, 07:45 AM ISTUpdated : Sep 25, 2024, 07:53 AM IST
Tirupati Laddu: திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்ததாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, கோயில் நிர்வாகம் பல்வேறு யாகங்களை நடத்தியது. இந்த சர்ச்சை லட்டு விற்பனையை பாதிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கத்தை விட அதிகளவில் லட்டுகள் விற்பனையாகி வருகின்றன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதம் மிகவும் பிரபலமானது, இதன் சுவை தனித்துவம் மிக்கது. ஏழுமலையானை பக்தர்கள் தரிக்கிறார்களோ இல்லையோ அந்த லட்டை சாப்பிடுவதற்காக சிலர் திருப்பதிக்கு வருகை தருகின்றனர். இந்நிலையில், திருப்பதி லட்டு விவகாரம் கடந்த ஒரு வாரமாகவே பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி கோயில் லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டாத அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
25
Animal Fat in Tirupati Laddu
ஆனால் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டுகளுக்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் திட்டவட்டமாக மறுத்தனர். அரசியல் ஆதாயத்திற்காக சந்திரபாபு நாயுடு எந்த அளவுக்கும் செல்வார் என்பதற்கு இதுவே ஒரு உதாரணம் கூறினர். இதனையடுத்து லட்டு தயாரிக்க பயன்படுத்தபட்ட நெய்யை குஜராத்தில் உள்ள தேசிய கால்நடை ஆராய்ச்சி ஆய்வகத்துக்கு அனுப்பி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் பன்றிக் மற்றும் மாட்டுக் கொழுப்பும், மீன் எண்ணெய், சோயா பீன், சூரிய காந்தி, பாமாயில் கலந்து இருப்பதும் உறுதியானது.
இதனையடுத்து கோயிலில் லட்டு தயாரிக்கப்படும் சமையல் அறையைப் புனிதப்படுத்தும் விதமாகவும், கோயில் புனிதத்தன்மையைப் பராமரிக்கும் விதமாகவும் தேவஸ்தானம் போர்டு மகாசாந்தி யாகம் உள்ளிட்ட பல்வேறு யாகங்கள் நடத்தப்பட்டது. மேலும் கோமியமும் தெளிக்கப்பட்டு குங்கிலியப் புகை வீசப்பட்டுள்ளது.
45
Tirupati Laddu News
இந்நிலையில் இந்த விவகாரம் லட்டு விற்பனை பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வழக்கத்தை விட அமோக லட்டு விற்பனையாகி வருகிறது.
செப்டம்பர் 19ம் தேதி 3.59 லட்சம் லட்டுகளும், 20ம் தேதி 3.17 லட்சம் லட்டுகளும், 21ம் தேதி 3.67 லட்சம், 22ம் தேதி 3.60 லட்சம், 23ம் தேதி 3.60 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமான லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் சுமார் 16 லட்சம் லட்டுகள் விற்பனையாகியுள்ளது. மேலும், தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமான லட்டுகள் தயாரிக்கப்படுவதாகவும், அதற்காகத் தினமும் பருப்பு, சர்க்கரை, முந்திரி, திராட்சை, பாதாம் உள்ளிட்ட இடுபொருள்களுடன் 15,000 கிலோ பசு நெய் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.