சிறுகச் சிறுக சேமித்த பணம் 3 மடங்கு பெருகணுமா? இந்த முறையில் ஃபாலோ பண்ணுங்க!

First Published Sep 24, 2024, 3:03 PM IST

போஸ்ட் ஆபிசில் முதலீடு செய்தால், அசல் தொகையை மூன்று மடங்காக பெருக்கிக்கொள்ளலாம். இதற்கு பிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

Triple your money

வங்கியைப் போலவே, தபால் நிலையத்திலும் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. இதில், உங்கள் பணத்தின் பாதுகாப்புக்கு அரசு உத்தரவாதம் அளிக்கிறது. தபால் அலுவலகத்தில் பல திட்டங்கள் உள்ளன. குறிப்பாக, போஸ்ட் ஆபிஸ் பிக்ஸட் டெபாசிட் பற்றி இப்போது தெரிந்துகொள்ளலாம்.

Post Office investment

வெவ்வேறு காலகட்டங்களுக்கான பிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் போஸ்ட் ஆபிசில் கிடைக்கின்றன. 5 வருட பிக்ஸட் டெபாசிட்டுக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இதனுடன், வருமான வரிச் சட்டம் 80C இன் கீழ் வரிச் சலுகையும் பெறுலாம். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால், டெபாசிட் செய்யும் அசல் தொகையை மூன்று மடங்காக உயர்த்தலாம்.

Latest Videos


Post Office schemes

போஸ்ட் ஆபிஸ் முதலீட்டின் மூலம் பணத்தை மூன்று மடங்காக அதிகரிக்க, 5 வருட பிக்ஸட் டெபாசிட் திட்டத்தைத் தேர்வு செய்ய வேண்டும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்து, முதிர்ச்சியடையும் நேரத்தில் அதை நீட்டிக்க வேண்டும். இப்படி இரண்டு முறை பிக்ஸட் டெபாசிட்டை நீட்டிக்க வேண்டும்.

Post Office FD interest rate

அதாவது 15 வருடங்கள் இந்த FD திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். இந்த எஃப்டி திட்டத்தில் ரூ.10 லட்சத்தை முதலீடு செய்தால், 7.5 சதவீதம் வட்டி விகிதத்தின் அடிப்படையில், 5 ஆண்டுகளில் ரூ.4,49,948 வட்டியாகக் கிடைக்கும். மொத்த தொகை ரூ.14,49,948 ஆக இருக்கும்.

Post Office 15 yr investment

போஸ்ட் ஆபிஸ் பிக்சட் டெபாசிட்டை முதலீட்டை தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தால், வட்டியாக மட்டும் ரூ.11,02,349 கிடைக்கும். 10 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தமாகக் கிடைக்கும் தொகை ரூ.21,02,349 ஆக இருக்கும். முதிர்ச்சி அடையும்போது மீண்டும் ஒருமுறை நீட்டிக்க வேண்டும்.

Post Office investment benefits

இரண்டாது நீட்டிப்புக்குப் பின் 15வது ஆண்டில், ரூ.10 லட்சம் முதலீட்டுக்கு வட்டியாக மட்டும், 20,48,297 ரூபாய் கிடைக்கும். முதிர்வுக் காலம் வரும்போது, ரூ.30,48,297 எடுத்துக்கொள்ளலாம். அசலை விட இரண்டு மடங்கு வட்டியும், முதலீடு செய்த அசல் தொகையும் சேர்ந்தே கிடைத்துவிடும்.

Triple your money with Tax benefits

ஒரு வருட FD திட்டத்தில் முதிர்வு தேதியிலிருந்து 6 மாதங்களுக்குள் மேலும் முதலீட்டை நீட்டிக்கலாம். 2 வருட FD திட்டம் என்றால் முதிர்வு காலத்தில் இருந்து 12 மாதங்களுக்குள் நீட்டிக்க முடியும். 3 முதல் 5 வருட பிக்ஸட் டெபாசிட்டை நீட்டிக்க முதிர்வு தேதியில் இருந்து 18 மாத அவகாசம் கிடைக்கும். இது தவிர, கணக்கைத் திறக்கும்போதே முதிர்ச்சி அடைந்த பிறகு மேலும் நீட்டிக்கக் கோரலாம். முதிர்வடையும் நாளில் உள்ள வட்டி விகிதம் நீட்டிக்கப்பட்ட காலத்திற்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!