ஒரு லெட்டருக்கு ரூ.50,000 பரிசு! அஞ்சல் துறை நடத்தும் கடிதம் எழுதும் போட்டி!

Published : Sep 22, 2024, 10:28 AM ISTUpdated : Sep 22, 2024, 10:34 AM IST

இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதம் போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில் கலந்துகொள்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை பரிசு வழங்கப்படுகிறது.

PREV
16
ஒரு லெட்டருக்கு ரூ.50,000 பரிசு! அஞ்சல் துறை நடத்தும் கடிதம் எழுதும் போட்டி!
Post office and letter writing

நெல்லை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி-2024 கடந்த 14ஆம் தேதி முதல் வருகிற டிசம்பர் மாதம் 14ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது" என்று கூறியுள்ளார்.

26
Post Office Contest Details

தபால் துறை நடத்தும் இந்தப் போட்டியில் அனைத்து வயதினரும் கலந்துகொள்ள வரவேற்கப்படுகின்றனர். போட்டிக்கான கடிதத்தை, 'எழுதுவதின் மகிழ்வு, டிஜிட்டல் யுகத்தில் கடிதங்களின் முக்கியத்துவம்' என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய ஏதாவது ஒரு மொழியில் கடிதத்தை எழுதிலாம்.

36
Post Office Letter writing competition rules

இன்லேண்ட் லெட்டரில் கடிதம் எழுதுபவர்கள் 500 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதி அனுப்ப வேண்டும். கடிதத்தைக் கவரில் வைத்து அனுப்புவோர் 1000 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதி அனுப்பலாம். இரண்டு விதமான கடிதங்களுர் கைப்பட எழுதியவையாக இருக்க வேண்டும் என்பது முக்கியமான நிபந்தனை.

46
Letter Writing Contest

போட்டியில் கலந்துகொள்ள வயது வரம்பு இல்லை என்றாலும், '1.1.2024 அன்று 18 வயது நிறைவு பெற்றவன் / நிறைவு பெறாதவன்' என்ற வயது சான்று கடிதத்துடன் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும் என்றும் அஞ்சல் துறை செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. போட்டியில் பங்குபெறுவோரின் பெயர் மற்றும் இருப்பிட முகவரியை கடிதத்தில் தவறாமல் குறிப்பிட வேண்டும்.

56
Post Office Letter Writing Competition 2024

கடிதத்தை 'அஞ்சல்துறை முதன்மை தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை - 600002' என்ற முகவரிக்கு, 'முதுநிலை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர், நெல்லை அஞ்சல் கோட்டம், நெல்லை- 627002' என்ற முகவரி மூலம் அனுப்ப வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த கடிதங்களுக்கு தேசிய அளவிலும் மாநில அளவிலும் ரொக்கப் பரிசு கிடைக்கும்.

66
Post Office Letter Writing Contest 2024 Prizes

மாநில அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.25,000, 2ஆம் பரிசு ரூ.10,000 மற்றும் 3ஆம் பரிசு ரூ.5,0000 வழங்கப்படும். தேசிய அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.50,000, 2ஆம் பரிசு ரூ.25,000 மற்றும் 3ஆம் பரிசு ரூ.10,000 பரிசாக அளிக்கப்படும். கடிதம் எழுதும் போட்டியில் பொதுமக்கள், மாணவ - மாணவிகள் அனைவரும் பங்குகொள்ளவும் அஞ்சல் துறை கேட்டுக்கொண்டிருக்கிறது.

click me!

Recommended Stories