tasmac
மதுபானம் விலை- குடிமகன்கள் அதிர்ச்சி
மதுபானம் விற்பனையானது நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. மதுபான கடைகளும், பார்களும் போட்டி போட்டி தொடங்கப்படுகிறது. ஆனால் மதுபான விலையை அந்த அந்த மாநில அரசே நிர்ணயிக்கிறது. அந்த வகையில் மின்சாரம்,பால் , பேருந்து கட்டணங்கள் சற்று உயர்த்தினாலும் அரசியல் கட்சிகள் முதல் பொதுமக்கள் வரை அரசை விமர்சிப்பது மட்டுமல்ல, சாலையில் இறங்கி போராட்டத்திலும் ஈடுபடுவார்கள். ஆனால் மதுபான விலையானது எவ்வளவு உயர்த்தினாலும் எந்தவித எதிர்ப்பும் இருக்காது. மதுபான கடையில் கூட்டம் தான் தொடர்ந்து அதிகரிக்கும். கிராமங்களில் மது குடித்தாலே ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் நிலை மாறி, தற்போது மதுபானம் குடிப்பது பேஷனாகிவிட்டது. முகத்தை மறைத்துக்கொண்டு மதுகுடித்த காலம் மலையேறிவிட்டது.
கோடிகணக்கணக்கில் பணம் கொட்டும் மது விற்பனை
ஆண்களுக்கு போட்டியாக பெண்களின் கைகளிலும் மதுபானம் அதிகளவு காட்சியளிக்கிறது. இரவு நேரத்தில் மது விருந்தோடு நடைபெறும் பார்ட்டிகளில் பல லட்சம் ரூபாய் செலவு செய்து உற்சாகத்தில் மிதந்து வருகிறார்கள் இன்றைய இளைஞர்கள்.அதே நேரத்தில் தமிழகத்தை பொறுத்தவரை அரசின் எந்த திட்டங்களை செயல்படுத்துவதாக இருந்தாலும் டாஸ்மாக் மூலம் வரும் வருவாய் மிகப்பெரிய உதவியாக இருந்து வருகிறது. அந்த அளவிற்கு மதுபானம் விற்பனை உள்ளது. சாதாரண நாட்களில் நாளொன்றுக்கு 40 முதல் 6 கோடிக்கு விற்பனையாகும் மதுபானம், இதுவே தீபாவளி, பொங்கல், புத்தாண்டு என்று சொன்னால் கேட்கவா வேண்டும் ஒரே நாளில் 150 முதல் 200 கோடி வரை மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது.
Chandra Babu
குடிமகன்களுக்கு குட் நியூஸ்
மேலும் தமிழக அரசை பொறுத்தவரை மதுபானம் விலையானது அவ்வப்போது உயர்த்தப்பட்டு வருகிறது. பீர்களின் விலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. பிராந்தி மற்றும் விஸ்கியின் விலையும் ஒரு குவாட்டருக்உக 10 ருபாய் முதல் 30 ரூபாய் வரை உயர்ந்தது. இதனால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சூழ்நிலையில் குடிமகன்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய அறிவிப்பை ஆந்திரா அரசு அறிவித்துள்ளது. அந்தவகையில் ஆந்திராவில் வரும் 1ம் தேதி முதல் 99ரூபாய்க்கு 180மிலி மதுபானங்கள் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய மதுபான கொள்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் படி, அனைத்து வகையான மதுபானங்களின் விலையையும் மாநில அரசு குறைத்து அறிவித்துள்ளது.