ரயில்களில் முதியோருக்குக் கிடைக்கும் 3 சிறப்பு வசதிகள்! இதை நல்லா ஞாபகம் வச்சுக்கோங்க!

First Published | Sep 26, 2024, 4:18 PM IST

ரயில் பயணத்தின்போது வயதான பயணிகளுக்கு கிடைக்கும் பல வசதிகள் குறித்து பெரும்பாலானோர் அறிந்திருக்க மாட்டார்கள். மூத்த குடிமக்கள் ரயிலில் பயணிக்கும்போது எளிதாகப் பெறக்கூடிய 3 சிறந்த வசதிகளைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

Lower Berth Reservation for Senior Citizens

இந்திய ரயில்வே பயணிகளுக்குத் தேவையான பலவிதமான வசதிகளையும் செய்து தருகிறது. ஒவ்வொரு வகுப்பு பயணிகளுக்கும் வெவ்வேறு வசதிகள் கிடைக்கிறது. இது தவிர, மூத்த குடிமக்களுக்கு மட்டும் பிரத்யேகமான சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

Indian Railways for Senior Citizens

60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்கள், 58 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பெண்கள் முதியோருக்கான ரயில்வேயின் சிறப்பு வசதிகளைப் பெறலாம். ஆனால், வயதானவர்களுக்கு ரயில் பயணத்தின் போது கிடைக்கும் பல வசதிகள் பலருக்குத் தெரியாது. அவற்றில் முக்கியமான சில வசதிகளைப் பற்றி இத்தொகுப்பில் தெரிந்துகொள்வோம்.

Latest Videos


Lower berth allocation for Senior Citizens

மூத்த குடிமக்களுக்கான லோயர் பெர்த் இட ஒதுக்கீடு:

இந்திய இரயில்வேயின் சில ரயில்களைத் தவிர, பெரும்பாலானவற்றில் முன்பதிவு செய்யப்பட்ட மற்றும் முன்பதிவு செய்யப்படாத இரண்டு வகையான பெட்டிகள் உள்ளன. அதே நேரத்தில், லோயர், மிடில், அப்பர் என மூன்று வகையான பெர்த்கள் உள்ளன.

முன்பதிவின்போது, ​​வயதான பயணிகளின் வசதிகளை மனதில் கொண்டு, ரயில்வே அவர்களுக்கு லோயர் பெர்த்தை ஒதுக்க முன்னுரிமை கொடுக்கிறது. 45 வயதை எட்டிய பெண் பயணிகளுக்கும் லோயர் பெர்த் கிடைக்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது. முன்பதிவு செய்யும்போது, தானாகவே லோயர் பெர்த் ஒதுக்கப்படும்.

Empty Lower Berth

லோயர் பெர்த் கிடைக்காதபோது:

மூத்த குடிமக்களுக்கு இருக்கைகள் கிடைப்பதை உறுதிசெய்ய இந்த வசதி இருக்கிறது. ஒருவேளை வயதான பயணிகளுக்கு முன்பதிவின்போது லோயர் பெர்த் கிடைக்கவில்லை என்றால், பயணத்தின்போது TTE-ஐ சந்தித்து காலியான லோயர் பெர்த்தை கேட்டுப் பெறலாம்.

ரயில்வே விதிகளின்படி, ரயில் புறப்பட்ட பிறகு, கீழ் பெர்த் காலியாக இருந்தால், நடுத்தர அல்லது மேல் பெர்த்களைக் கொண்ட மூத்த குடிமக்கள் அதை ஒதுக்குமாறு TTE-யிடம் கோரலாம். சில நடைமுறைகளை முடித்துவிட்டு, TTE அவர்களுக்கு கீழ் பெர்த்தை ஒதுக்குவார்.

Sleeper and AC coaches

ஸ்லீப்பர், ஏசி பெட்டிகளில் முதியோர் இருக்கைகள்:

இந்திய ரயில்வேயின் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளைக் கொண்ட அனைத்து ரயில்களிலும் மூத்த குடிமக்களுக்காக சில பெர்த்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. விதிகளின்படி, அனைத்து ஸ்லீப்பர் பெட்டிகளிலும் ஆறு லோயர் பெர்த்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேசமயம், 3 டியர் ஏசி மற்றும் 2 டியர் ஏசி பெட்டிகளில் மூத்த குடிமக்களுக்கு 3 லோயர் பெர்த்கள் ஒதுக்கப்படுகின்றன.

தேவைக்கு ஏற்ப, 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் கர்ப்பிணிகளும் இந்த இருக்கைகளைப் பெறலாம். வழக்கமான விரைவு ரயில்களை விட ராஜ்தானி எக்ஸ்பிரஸ் மற்றும் துரந்தோ எக்ஸ்பிரஸ் போன்ற முழுமையான ஏசி கோச்களைக் கொண்ட ரயில்களிலும் மூத்த குடிமக்களுக்காக அதிக எண்ணிக்கையிலான பெர்த்கள் ஒதுக்கப்படுகின்றன.

Local trains

உள்ளூர் ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை:

சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களில் இயக்கப்படும் உள்ளூர் ரயில்கள் மிகவும் பிரபலமானவை. மத்திய மற்றும் மேற்கு ரயில்வே மும்பையில் உள்ளூர் ரயில்களை இயக்குகிறது. இந்த இரண்டு மண்டலங்களின் உள்ளூர் ரயில்களிலும் மூத்த குடிமக்களுக்கு சில இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலான ரயில்களில் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் வயதானவர்களுக்கான இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது தவிர, நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களில் மூத்த குடிமக்களுக்கு சக்கர நாற்காலிகள் மற்றும் போர்ட்டர்கள் உதவி வழங்கப்படுகிறது. ஆனால் போர்ட்டருக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

click me!