ஜூன், டிசம்பர் மாத கடைசி தேதியில் பணி ஓய்வு பெற்றால் அதிக பென்ஷன் கிடைக்குமா?

Published : Sep 28, 2024, 03:59 PM IST

மே 1, 2023 முதல், தகுதியுடைய ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களின் ஓய்வூதியங்கள் அதிகரித்துக் கணக்கிடப்படும். ஆனால் இந்தத் தேதிக்கு முந்தைய காலத்திற்கு இந்த உயர்வு வழங்கப்படாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

PREV
18
ஜூன், டிசம்பர் மாத கடைசி தேதியில் பணி ஓய்வு பெற்றால் அதிக பென்ஷன் கிடைக்குமா?

பணியாளர்கள் தரப்பு தேசிய கவுன்சிலின், கூட்டு ஆலோசனை மிஷினரி ஆகியவை இணைந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய கணக்கீட்டை முன்னிட்டு, அகவிலைப்படி உயர்வு வழங்குவதற்கான பொது உத்தரவை வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

28

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்குப் பயனளிக்கும் நோக்கில் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் தொடர்ச்சியாக இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

38

சென்ற செப்டம்பர் 6ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், ஜூன் அல்லது டிசம்பர் மாதங்களின் கடைசி வேலை நாளில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பென்ஷன் கணக்கிடும் முறையில் ஒரு விரிவான அரசு உத்தரவு வெளியிடுவது குறித்து செயலாளர் கோபால் மிஸ்ரா கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

48

பல ஓய்வூதியதாரர்கள், தங்களுக்கு சரியான ஓய்வூதிய உயர்வைப் பெறுவதில் சவால்களை எதிர்கொள்கின்றனர். அவர்கள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மத்திய நிர்வாக தீர்ப்பாயங்களை (CATs) அணுக வேண்டிய நிலை உள்ளது.

58
lic pension plan 4

நீதிமன்றங்கள் பொதுவாக இந்த ஊழியர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்குகின்றன, ஆனால் அரசாங்கம் மனுக்களை தாக்கல் செய்தவர்களுக்கு மட்டுமே மாற்றங்களைச் செயல்படுத்தியுள்ளது. இது முரண்பாடுகளுக்கும் புதிய சிக்கல்களுக்கும் வழிவகுக்கிறது எனவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

68
pension

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. மே 1, 2023 முதல், தகுதியுடைய ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களின் ஓய்வூதியங்கள் அதிகரித்துக் கணக்கிடப்படும். ஆனால் இந்தத் தேதிக்கு முந்தைய காலத்திற்கு இந்த உயர்வு வழங்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

78
lic pension plan 1.jpg

ரிட் மனுக்களை தாக்கல் செய்பவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் தாமதமின்றி கிடைக்கும். இன்னும் மேல்முறையீட்டில் உள்ள அல்லது இறுதித் தீர்ப்பு வராத வழக்குகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. தற்போதைய வழக்குகளில் தலையிட விண்ணப்பித்துள்ள ஓய்வுபெற்ற ஊழியர்கள், அவர்கள் விண்ணப்பித்த நாளிலிருந்து உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தைப் பெறலாம்.

88
pension

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளின் அடிப்படையில், தகுதியுடைய அனைத்து ஓய்வூதியதாரர்களும் ஊதிய உயர்வு பெறுவதை உறுதி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு செயலாளர் மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார். இது மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியக் கணக்கீட்டு செயல்முறையில் தெளிவை உண்டாக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories