அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு; போனஸ் எவ்வளவு தெரியுமா?

First Published | Oct 23, 2024, 1:23 PM IST

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

Diwali Bonus

நாடு முழுவதும் வருகின்ற 31ம் தேதி தீபாவளிப் பண்டிகைக் கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை கோலாகலமாகக் கொண்டாட பொதுமக்களும் முழுவீச்சில் தயாராகி வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை, மளிகைப் பொருட்கள், பட்டாசு வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவதால் கடை வீதிகள் கூட்டமாகக் காணப்படுகின்றன.

Diwali Bonus

பொதுமக்களின் பொருளாதார நிலையை சீர்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுள் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளன. முன்னதாக புதுச்சேரியில் 8 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ரேசன் கடைகள் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை இலவசமாக வழங்கப்படுகிறது.

Tap to resize

Diwali Bonus

அந்த வரிசையில் புதுச்சேரி அரசுப் பணியில் ஈடுபட்டுள்ள குரூப் பி மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.7 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவைப் பின்பற்றி, புதுச்சேரி அரசின் நிதித் துறை சார்பு செயலர் சிவகுமார் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு நகலானது இன்று அனைத்து துறை செயலாளர்கள், துறை தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Diwali Bonus

இதனிடையே புதுச்சேரியில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கட்டிட தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரமும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.1,500ம் தீபாவளி போனசாக அறிவித்து முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

Latest Videos

click me!