ஆதார் கார்டு தகவல் பாதுகாப்புக்கு கேரண்டி! 5 புதிய அப்டேட்ஸ் என்ன தெரியுமா?

First Published | Oct 23, 2024, 8:55 AM IST

சமீபத்தில், ஆதார் ஆணையம் (UIDAI) சில புதிய விதிகள் மற்றும் அப்டேட்களை வெளியிட்டுள்ளது. அவை என்னென்ன என்று தெரிந்துகொள்வோம்.

UIDAI Updates

ஆதார் அட்டை நம் வாழ்வின் முக்கிய அங்கமாகிவிட்டது. இது ஒரு அடையாள அட்டை மட்டுமல்ல, பல அரசு மற்றும் தனியார் சேவைகளைப் பெறவும் இது அவசியம். சமீபத்தில், ஆதார் ஆணையம் (UIDAI) சில புதிய விதிகள் மற்றும் அப்டேட்களை வெளியிட்டுள்ளது. அவை என்னென்ன என்று தெரிந்துகொள்வோம்.

Aadhaar card holders

ஆதார் ஆணையம் ஆதார் கார்டில் உள்ள தகவலை இலவசமாகப் புதுப்பிக்கும் வசதியை டிசம்பர் 14, 2024 வரை நீட்டித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேல் பழைய ஆதார் கார்டு வைத்திருக்கும் நபர்களுக்கு இந்த முடிவு பயனுள்ளதாக இருக்கும். அவர்கள் டிசம்பர் 14, 2024 வரை இலவசமாக ஆதார் தகவல்களை அப்டேட் செய்துகொள்ளலாம். இந்தக் காலத்திற்குப் பிறகு, அப்டேட் செய்வதற்கான கட்டணமா ரூ.50 பெறப்படும்.

Latest Videos


Aadhaar card updates

இந்த இலவச அப்டேட் வசதி ஆதார் தகவல்களை புதுப்பித்துக்கொள்ள சிறந்த வாய்ப்பாக உள்ளது. அதுமட்டுமில்லாமல், ஆதார் தகவல்கள் சரியாக இருப்பது மக்கள் பல்வேறு சேவைகளைப் பெறுவதையும் எளிதாக்கும்.

mAadhaar app

ஆதார் வைத்திருப்பவர்களின் வசதிக்காக ஆன்லைன் அப்டேட் வசதியை ஆதார் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் உங்கள் ஆதார் தகவலை வீட்டிலிருந்தே இணையதளம் மூலம் புதுப்பிக்கலாம்.

Aadhaar biometric database

ஆதார் பதிவு மற்றும் புதுப்பிப்புக்கான புதிய படிவங்களையும் ஆதார் ஆணையம் அண்மையில் வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய படிவங்கள் பலதரப்பு மக்களின் தேவைகளை மனதில் கொண்டு சுலபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய படிவங்கள் ஆதாரில் திருத்தம் செய்வது மற்றும் புதிய ஆதார் கார்டு பெறுவது தொடர்பான செயல்முறையை மிகவும் எளிமையாக்கும் என்று ஆதார் ஆணையம் கருதுகிறது.

Aadhaar data

ஆதார் வைத்திருக்கும் அனைத்து இந்தியக் குடிமக்களும் தங்களின் ஆதார் தகவல்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என ஆதார் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ஆதார் டேட்டா பேஸின் துல்லியத்தன்மையைப் பராமரிக்க இந்த விதி முக்கியமானது.

Aadhaar free update

ஆதார் தகவல்களை சமீபத்திய விவரங்களுடன் அப்டேட் செய்வது பல வழிகளில் பயனுள்ளது. அரசு சேவைகளைப் பெறுவது எளிதாக இருக்கும். டிஜிட்டல் மோசடி ஆபத்து குறையும். திருமணம், வேலை மாறுதல் அல்லது புதிய இடத்திற்கு குடியேறுதல் போன்ற சந்தர்ப்பங்களில் புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் கொண்ட ஆதார் மிகவும் முக்கியமானது.

Blue Aadhaar

ப்ளூ ஆதார் எனப்படும் குழந்தைகளின் ஆதார் அட்டைகளுக்கு ஆதார் ஆணையம் சில சிறப்பு விதிகளை உருவாக்கியுள்ளது. இதில் முக்கியமானது, குழந்தைககளுக்கு 15 வயதிற்கு மேல் ஆனதும் பயோமெட்ரிக் தகவல்களை கட்டாயமாகப் புதுப்பிக்க வேண்டும்.

குழந்தைகள் வளரும்போது அவர்களின் பயோமெட்ரிக் தகவல்களைப் புதுப்பித்துக்கொள்வது எதிர்காலச் சிக்கல்களைத் தவிர்க்க உதவும்.

click me!