கர்நாடகா
ஆம்.. இந்த பரபரப்பு சர்வே நடத்தப்பட்டது கர்நாடகாவில் தான். கர்நாடகத்திற்கான இந்த கணக்கெடுப்பு முடிவுகளில்கள், நிதி உள்ளடக்கம் மற்றும் நகர்ப்புற கல்வியில், கர்நாடக மாநிலம் சிறந்து விளங்குகிறது. ஆனால் கிராமப்புற கல்வியை உற்றுநோக்கும்போது தான் பெரிய சரிவை சந்திக்கிறது. மேலும் கர்நாடகாவில் உள்ள கிராமப்புற-நகர்ப்புற இடைவெளியை இது எடுத்துக்காட்டுகிறது. பெங்களூரு, இந்திய அளவில் தொழில்நுட்ப வளர்ச்சி கொண்ட மாநிலமாக உள்ளது. அதே போல 25 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய, அந்த மாநிலத்தின் நகர்ப்புற மக்கள் தொகையில் சுமார் 56.6 சதவீதம் பேர் குறைந்தபட்சம் இடைநிலைக் கல்வியைப் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், அந்த மாநிலம் அதன் இளைய வயதுடைய மக்களிடையே நம்பிக்கைக்குரிய கல்வியறிவு விகிதங்களைக் காட்டுகிறது. ஏறக்குறைய 15-24 வயதுடைய ஆண்களில் 97.8 சதவீதமும், பெண்களில் 95.9 சதவீதமும் புரிந்துணர்வுடன் எளிய அறிக்கைகளைப் படிக்கவும் எழுதவும் முடியும், இது கல்வியறிவு நிலைகள் தேசிய தரத்திற்கு இணையாக இருப்பதைக் குறிக்கிறது. நகர்ப்புற மையங்களில் இடைநிலை மற்றும் மூன்றாம் நிலைக் கல்விக்கான சிறந்த அணுகலுடன் இணைந்து சிறுவயதுக் கல்வியில் கவனம் செலுத்துவதே இதற்குக் காரணம்.