Top 10 Longest Railway Platform : உலகிலேயே மிகவும் நீளமான பிளாட்பாரத்தை கொண்ட டாப் 10 ரயில் நிலையங்களில் பெரும்பாலானவை இந்தியாவில் தான் இருக்கிறது, அதன் பட்டியலை பார்க்கலாம்.
ரயில் நிலையங்களில் ரயில்கள் நின்று செல்லும்போது மக்கள் அதில் ஏறி இறங்க உதவுவது ரயில்வே பிளாட்பார்ம் தான். அந்த பிளாட்பார்ம் மிக நீளமானதாக இருக்கும். அப்படி உலகின் நீளமான பிளாட்பார்ம் கொண்ட ரயில் நிலையங்களின் பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதில் இந்தியாவில் உள்ள ரயில் நிலையங்கள் தான் 8 இடங்களை பிடித்துள்ளன. அது என்னென்ன ரயில் நிலையங்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
25
Hubballi Railway Station
உலகிலேயே மிக நீளமான பிளாட்பார்ம் கொண்ட ரயில் நிலையம் இந்தியாவில் தான் இருக்கிறது. கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்ள ரயில் நிலையம் தான் உலகின் நீளமான பிளார்பார்மை கொண்டுள்ளது. இந்த பிளாட்பார்ம் 1.5 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாகும். இந்த பிளாட்பார்ம் கடந்த ஆண்டு பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த தனித்துவமான சாதனையால் ஹூப்ளி ரயில் நிலையம் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்து உள்ளது.
அதற்கு அடுத்தபடியாக 1.36 கிலோமீட்டர் நீள ரயில்வே பிளாட்பார்ம் கொண்ட கோரக்பூர் ரயில் நிலையம் இரண்டாம் இடத்தில் உள்ளது. மூன்றாம் இடத்தில் கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள ரயில் நிலையம் உள்ளது. அங்குள்ள பிளாட்பார்ம் 1.18 கிலோமீட்டர் நீளம் கொண்டதாகும். அதற்கு அடுத்த படியாக மேற்கு வங்கத்தில் உள்ள கரக்பூர் ரயில்நிலையம் நான்காம் இடம்பிடித்துள்ளது. இங்கு 1.17 கிலோ மீட்டர் நீளத்தில் ரயில்வே பிளார்பார்ம் அமைந்துள்ளது.
45
Chennai Egmore
அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் அமைந்துள்ள ஸ்டேட் ஸ்டிரீட் சப்வே ரயில்நிலையம் 1.06 கி.மீ நீளம் கொண்ட பிளாட்பார்ம் உடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்த எக்மோர் ரயில் நிலையம் 6ம் இடத்தில் இருக்கிறது. அங்கு 925 மீட்டர் நீளம் கொண்ட பிளாட்பார்ம் உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிலிபிட் ரயில் நிலையம் 900 மீட்டர் நீளம் கொண்ட பிளாட்பார்ம் உடன் 7ம் இடத்தை பிடித்திருக்கிறது.
55
Longest Railway Platform in the World
இந்த பட்டியலில் 8 மற்றும் 9வது இடத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஆட்டு கிளப் ஸ்பீடுவே ரயில் நிலையமும், பிலாஸ்பூர் ரயில் நிலையமும் உள்ளது. இதில் ஆட்டு கிளப் ரயில் நிலையம் 815 மீட்டர் கொண்ட பிளாட்பாரத்தையும், பிலாஸ்பூர் 802 மீட்டர் நீளம் கொண்ட பிளாட்பாரத்தையும் கொண்டுள்ளது. இந்த பட்டியலில் 10வது இடத்தில் இங்கிலாந்தின் கெண்ட் பகுதியில் அமைந்துள்ள செரிட்டன் ஷட்டில் ரயில் நிலையம் உள்ளது. இதன் பிளாட்பார்ம் நீளம் 791 மீட்டர் ஆகும்.