மூத்த குடிமக்களிடம் இந்த கார்டு இருந்தா போதும்! எக்கச்செக்க சலுகைகள் காத்திருக்கு!

First Published | Oct 20, 2024, 11:28 AM IST

மூத்த குடிமக்கள் அட்டை என்றால் என்ன என்று தெரியுமா? இந்த ஒரு அட்டையின் மூலம் ரயில், விமனாப் பயணங்கள், வங்கி முதலீடுகள், மருத்துவம் ஆகியவற்றில் சலுகைகள் பெறுவது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

Senior Citizen Card

மூத்த குடிமக்கள் அட்டையில் பல நன்மைகள் உள்ளன. இந்த அட்டை மூலம் பல அரசு திட்டங்களைப் பெறலாம். 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் மட்டுமே மூத்த குடிமக்கள் அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும்.

இது ஒரு முக்கியமான ஆவணம். மூத்த குடிமக்கள் அட்டை மூலம், பயணம், மருத்துவம் மற்றும் வங்கியில் பல நன்மைகளைப் பெறுலாம். இந்த அட்டையின் பலன்களையும், இந்த அட்டைக்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்பதையும் தெரிந்துகொள்வோம்.

Senior Citizens above 60 years

இது மூத்த குடிமக்களுக்கான அரசு அடையாள அட்டை போன்றது. 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இந்த அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும். மூத்த குடிமக்களுக்கு மூத்த குடிமக்கள் அட்டை மூலம் பல வழிகளில் உதவி செய்யப்படுகிறது. இந்த அட்டை மாநில அரசால் வழங்கப்படுகிறது. இந்த அட்டையை வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தலாம். இந்த அட்டைக்கு நீங்கள் ஆஃப்லைனிலும் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.

Tap to resize

How to get Senior Citizen Card?

மூத்த குடிமக்கள் அட்டையைப் பெற ஆன்லைனில் உங்கள் மாநில அரசின் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் கவனமாக நிரப்பி, தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

மாநில அரசின் விதிகளைப் பொறுத்து, விண்ணப்பக் கட்டணம் இருந்தால், அதையும் செலுத்த வேண்டும். சமர்ப்பித்த பிறகு, 30 நாட்களுக்குள் அட்டை கிடைத்துவிடும்.

Senior Citizens Card Application

மூத்த குடிமக்கள் அட்டைக்கு ஆஃப்லைனில் விண்ணப்பிக்க விரும்பினால், அருகில் உள்ள தாலுகா அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். அங்கு அளிக்கப்படும் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களையும் வழங்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் இருந்தால் அதையும் செலுத்திவிட்டு, ரசீது பெற்றுக்கொள்ளலாம். 30 நாட்களுக்குள் உங்களுக்கு கார்டு கிடைத்துவிடும்.

Senior Citizens Card Benefits

மூத்த குடிமக்கள் அட்டையிலிருந்து பல நன்மைகள் கிடைக்கின்றன. உதாரணமாக, ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் 40 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும். சில விமான நிறுவனங்கள் மூத்த குடிமக்களுக்கு சலுகைகளை வழங்குகின்றன.

பிக்ஸட் டெபாசிட் அல்லது சேமிப்புக் கணக்கில் அதிக வட்டியைப் பெறலாம். வீட்டுக் கடன்களுக்கும் குறைந்த வட்டி விதிக்கப்படும். அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை கிடைக்கும்.

Latest Videos

click me!