உலகின் நான்காவது மிகப்பெரிய ரயில் நெட்வொர்க் ஆக இந்திய ரயில்வே இருந்து வருகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளாட்பார்ம் இருக்கும். அதில் இருந்து தான் பயணிகள் ரயிலில் ஏறி பயணிக்க முடியும். அப்படி ரயில் நிலையங்களில் இருக்கும் பிளாட்பாரங்கள் நம்பர் அடிப்படையில் தான் குறிப்பிடப்படும். அதன்படி 1ம் நம்பரில் இருந்து தான் பிளார்ட்பார்ம் தொடங்கும். ஆனால் ஒன்றாவது பிளாட்பார்மே இல்லாத ஒரு விநோத ரயில் நிலையம் இந்தியாவில் இருக்கிறது.
24
Barauni Railway Station
அந்த ரயில்நிலையம் பீகாரில் அமைந்துள்ளது. பீகாரில் உள்ள பெகுசாராய் மாவட்டத்தில் கடந்த 1860-ம் ஆண்டு கதாரா ரயில்நிலையம் தொடங்கப்பட்டு இருக்கிறது. ஒரு பிளாட்பார்ம் உடன் இயங்கி வந்த அந்த ரயில் நிலையம் 1883-ம் ஆண்டு மூடப்பட்டது. பின்னர் அதிலிருந்து வடக்கே மூன்று கிலோமீட்டர் தொலைவில் பிரவுனி ரயில்நிலையம் கட்டப்பட்டது. அன்றில் இருந்து இன்று வரை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ரயில்கள் பிரவுனி ரயில்நிலையம் வழியாக சென்று வருகின்றன.
பீகாரில் உள்ள பிசியான ரயில்நிலையங்களில் இந்த பிரவுனி ஸ்டேஷனும் ஒன்று. அந்த ரயில் நிலையத்தில் இருந்து மட்டும் சுமார் 1 லட்சம் பயணிகள் தினசரி பயணம் செய்கின்றனர். இந்த ரயில்நிலையத்தில் தான் ஒன்றாவது பிளாட்பார்மே கிடையாது. ஏனெனில் கதாரா ரயில்நிலையம் ஒன்றாவது பிளாட்பார்மை கொண்டிருந்ததால், அதன் அருகில் கட்டப்பட்டுள்ள இந்த ரயில் நிலையத்திற்கு ஒன்றாவது பிளாட்பாரத்தை ரயில்வே ஒதுக்கீடு செய்யவில்லை.
44
Barauni Railway Station without 1st platform
இதன்காரணமாக இரண்டாவது பிளாட்பாரத்தில் இருந்து பிரவுனி ரயில் நிலையம் இயங்கி வருகிறது. இந்தியாவிலேயே ஒன்றாவது பிளாட்பார்ம் இல்லாத ரயில் நிலையம் என்கிற பெருமையையும் இந்த பிரவுனி ரயில் நிலையம் பெற்றுள்ளது. இந்த ரயில் நிலையத்தில் மொத்தம் 9 பிளாட்பாரங்கள் உள்ளன. பீகார் மாநிலத்தில் இயங்கி வரும் பிரதான ரயில் நிலையங்களில் இந்த பிரவுனி ரயில் நிலையமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.