ஜூன் 12 அன்று நடந்த ஏர் இந்தியா விமான விபத்து குறித்த AAIB அறிக்கையில் பைலட் செய்த தவறுதான் விபத்துக்குக் காரணம் என்ற கூற்றை விமானிகள் சங்கம் நிராகரித்துள்ளது. விசாரணைக் குழுவில் தகுதியான விமானிகள் சேர்க்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளது.
ஜூன் 12 அன்று நடந்த ஏர் இந்தியா விமான விபத்து குறித்த விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தின் (AAIB) அறிக்கைக்கு இந்திய விமானிகள் சங்கம் (ALPA India) சனிக்கிழமை அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. பைலட் செய்த தவறுதான் விபத்துக்குக் காரணம் என்ற தொனியில் அறிக்கையில் உள்ள கூற்றை நிராகரிப்பதாக விமானிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
25
உண்மை அடிப்படையிலான விசாரணை
"விசாரணையின் தொனி பைலட் செய்த தவறுதான் விபத்துக்குக் காரணம் என்ற சார்புநிலையைக் காட்டுகிறது. இந்த அனுமானத்தை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். மேலும் நியாயமான, உண்மை அடிப்படையிலான விசாரணை நடத்த வலியுறுத்துகிறோம்," என்று விமானிகள் சங்கம் கூறியது.
35
விசாரணையில் வெளிப்படைத்தன்மை இல்லை
"அறிக்கை எந்தவொரு அதிகாரப்பூர்வ கையொப்பமோ அங்கீகாரமோ இல்லாமல் ஊடகங்களுக்குக் கசிந்துள்ளது. விசாரணையில் வெளிப்படைத்தன்மை இல்லை, ஏனெனில் விசாரணைகள் தொடர்ந்து ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இதனால் நம்பகத்தன்மை குறைகிறது. தகுதியான, அனுபவம் வாய்ந்த பணியாளர்கள், குறிப்பாக விமானிகள், இன்னும் விசாரணைக் குழுவில் சேர்க்கப்படவில்லை" என்றும் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமானத்தின் விபத்து குறித்த முதல் அறிக்கை, விமானம் புறப்பட்ட 3 வினாடிகளுக்குப் பிறகு இரு என்ஜின்களுக்கும் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டதாகக் கூறுகிறது. எரிபொருள் செல்வதை நிறுத்தும் சுவிட்சுகள் ஒன்றன் பின் ஒன்றாக 'RUN' நிலையிலிருந்து 'CUTOFF' நிலைக்கு மாறியதே இதற்குக் காரணம் என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.
55
காக்பிட் குரல் பதிவு
AAIB அறிக்கையின்படி, விமானத்தின் சிதைவுகள் சுமார் 1,000 அடிக்கு 400 அடி பரப்பளவில் பரவியிருந்தன. காக்பிட் குரல் பதிவில், ஒரு விமானி மற்றவரிடம் ஏன் எரிபொருளை நிறுத்தினீர்கள் என்று கேட்பதும், அதற்கு மற்றவர் தான் அதைச் செய்யவில்லை என்று பதிலளிப்பதும் பதிவாகியுள்ளது எனவும் அறிக்கை தெரிவித்துள்ளது.