Published : Jul 12, 2025, 02:16 PM ISTUpdated : Jul 12, 2025, 02:19 PM IST
ஜூன் 12 அன்று நடைபெற்ற ஏர் இந்தியா விமான விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர். விபத்துக்கான முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகி, விமானம் புறப்பட்ட சில நொடிகளில் என்ஜின்கள் நின்று விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது.
நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய விமான விபத்து ஜூன் 12 அன்று நடைபெற்றுள்ளது. குஜராத் மாநிலம், அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் (AI-171, போயிங் 787-8 ட்ரீம்லைனர்) புறப்பட்ட சில நொடிகளில் மேகானி நகரில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி வெடித்து சிதறியது.
இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 242 பயணிகளில் 241 பேர் உள்ளிட்ட 260 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் விமான விபத்து நடைபெற்று ஒரு மாத காலம் முடிவடைந்துள்ள நிலையில் இன்று விமான விபத்திற்கான காரணம் தொடர்பாக முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் விமான விபத்திற்கு முன்பாக நடந்தது என்ன.? என தகவல்கள் இடம்பெற்றுள்ளது.
24
விபத்தின் போது விமானத்தில் நடந்தது என்ன.?
அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் மதியம் 1:38 மணிக்கு புறப்பட்டது.விமானம் 32 வினாடிகள் மட்டுமே வானத்தில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. புறப்படும் போது, விமானம் மணிக்கு 284 கிமீ வேகத்தை எட்டியது. அடுத்த இரண்டு வினாடிகளில், விமானம் மணிக்கு 287 கிமீ வேகத்தை எட்டியது. அதன் பிறகு விமானத்தின் சக்கரங்கள் தரையில் இருந்து உயர்ந்தன.
அடுத்த மூன்று வினாடிகளில், விமானம் மணிக்கு 334 கிமீ வேகத்தை எட்டியது. உடனடியாக, அப்போது யாரும் எதிர்பாராத வகையில் இரண்டு என்ஜின்களும் திடீரென நின்றுவிட்டன. இதனால் விமானம் பறக்க வேண்டிய உயரத்தை இழந்து RAT (ராம் ஏர் டர்பைன்) ஐப் பயன்படுத்த வேண்டியிருந்தது. இரண்டு என்ஜின்களும் நின்றாலோ அல்லது ஹைட்ராலிக் சக்தி இழந்தாலோ RAT பயன்படுத்தப்பட்டது ஆனால் உயரத்தில் மட்டுமே RAT வேலை செய்யும் என்பதால் விமானத்தில் நிலைப்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகியதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
34
விமானம் புறப்பட்டது முதல் விபத்து வரை நிமிடத்திற்கு நிமிட விவரங்கள்
11:17 – விமானம் டெல்லியிலிருந்து அகமதாபாத்தை வந்தடைந்தது.