விமானம் நொறுங்கும் நொடியில் பைலட்கள் பேசியது என்ன.? வெளியான கடைசி திக் திக் நிமிடங்கள்

Published : Jul 12, 2025, 01:41 PM IST

ஏர் இந்தியா விமான விபத்தில் 260 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான முதற்கட்ட அறிக்கை வெளியாகியுள்ளது. விமானம் புறப்பட்ட சில நொடிகளில் விபத்து நிகழ்ந்ததையும், காக்பிட்டில் ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலையையும் அறிக்கை வெளிப்படுத்துகிறது.

PREV
14
ஏர் இந்தியா விமான விபத்து

இந்தியாவில் கடந்த மாதம் நடைபெற்ற ஏர் இந்தியா விமான விபத்தை நாட்டையே அதிர்ச்சி அடைய செய்தது. அந்த வகையில் அகமதாபாத்தில் இருந்து விமானம் மூலம் லண்டனுக்கு செல்ல பல கனவுகளோடு 242 பேர் பயணம் செய்தனர். இந்தியாவில் இருந்து லண்டனுக்கு வேலை, பயணம் அல்லது குடும்ப நிகழ்வுகளுக்காக பயணித்தனர். அதில் குஜராத்தில் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் சஹில் சலீம் இப்ராகிம் படேல், லண்டன் அரசாங்கத்தின் இந்திய இளம் தொழில்முறை திட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டு வேலை விசாவைப் பெற்று, 

தனது குடும்பத்தின் வாழ்க்கையை மாற்றுவதற்காக பல கனவுகளோடு லண்டனுக்கு சென்று கொண்டிருந்தார். இதே போல வடமேற்கு லண்டனைச் சேர்ந்த ஹேமாக்ஸி ஷாந்திலால் அவரது கணவர் கிரிஷ் லாக்லி மற்றும் அவர்களது குழந்தைகளான ஆதிவ் மற்றும் தக்ஸ்வி கிரிஷ் ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் விமான விபத்தில் மொத்தமாக உயிரிழந்தனர்.

24
கனவுகளை காவு வாங்கிய விபத்து

இதே போல டாக்டர்கள், ஆசிரியர்கள், முன்னாள் முதலமைச்சர் என பலரும் தங்களது உயிரை இழந்தனர். 53 பிரிட்டிஷ் குடிமக்கள் விமானத்தில் இருந்தனர். இந்த விமான விபத்து சம்பவம் நாடு முழுவதும் மட்டுமல்ல இந்த உலகத்தையே அதிர்ச்சி அடைய செய்தது. இந்த விபத்து சம்பவம் நடைபெற்று ஒரு மாதம் முடிவடைந்துள்ள நிலையில் விபத்துக்கான காரணம் என்ன என பல வித குழப்பங்கள் ஏற்பட்டிருந்தது. 

இந்த நிலையில் விபத்து தொடர்பாக விமான விபத்து விசாரணைப் பிரிவு 15 பக்கம் கொண்ட முதற்கட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் விமானம் புறப்பட்ட சில நொடிகளில் விபத்து நடந்தது வரை தொடர் நிகழ்வுகளையும், 260 பேரின் உயிரிழப்புக்கும் வெளிப்படுத்தியுள்ளது.

34
விபத்துக்கான காரணம் என்ன.?

விமானம் புறப்பட்ட சில நொடிகளில் விமானத்தில் என்ன நடக்கிறது. என புரிந்து கொண்டு சூழ்நிலையை மாற்றுவதற்குள் விமானம் கட்டிடத்தின் மீது விழுந்து வெடித்து சிதறியுள்ளது. இந்த அறிக்கையில் விமானிகளால் விமானத்தில் என்ன நடக்கிறது என புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு வேகமாக நிகழ்ந்த சூழ்நிலைகளையும், ​​காக்பிட்டில் ஏற்பட்ட குழப்பம் மற்றும் உதவியற்ற தருணத்தையும் இந்த அறிக்கை பதிவு செய்துள்ளது. விமான விபத்து புலனாய்வு பணியகம் (AAIB) ஜூலை 11, 2025 அன்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு 15 பக்க முதற்கட்ட அறிக்கையை சமர்ப்பித்தது.

44
மேடே, மேடே, மேடே

அந்த அறிக்கையில் முக்கிய அம்சமாக காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டரில் (CVR) பதிவான உரையாடலில், ஒரு விமானி மற்றொரு விமானியிடம், "நீங்கள் ஏன் இரு இன்ஜின்களையும் கட்-ஆஃப் செய்தீர்கள்?" என்று கேட்க, அதற்கு மற்றொரு விமானி, "நான் எந்த இன்ஜினையும் கட்-ஆஃப் செய்யவில்லை" என்று பதிலளித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, விமானி இன்ஜின்களை மீண்டும் என்ஜினை இயக்க முயற்சித்த நிலையில் சரியான முறையில் எரிபொருள் கிடைக்காத காரணத்தால் விமானத்தின் என்ஜினால் உந்து சக்தியை கொடுக்கமுடியவில்லை. 

மேடே, மேடே, மேடே விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு 08:09:05 UTC மணிக்கு, விமானிகளில் ஒருவர் ஒரு துயர அழைப்பை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பியுள்ளார். ஆனால் அவ்வளவுதான். விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு பதிலளிக்க முயன்றபோது, ​​எந்த பதிலும் இல்லை. அமைதி மட்டுமே இறுதியாக கிடைத்து. விமானம் கட்டிடத்தின் மீது விழுந்து வெடித்து சிதறியுள்ளது. இதில் பலரது கனவுகளும் விண்ணில் கலந்தது.

Read more Photos on
click me!

Recommended Stories