நடிகர் சூர்யா அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகவும், ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவு அளிக்க உள்ளதாகவும் பரவிய வதந்திகளை அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் மறுத்துள்ளது. சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்த சூர்யா அறிவுறுத்தியுள்ளாராம்.
நடிகர் சூர்யா விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருக்கிறார் அல்லது ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவு அளிக்க இருக்கிறார் என சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளுக்கு, அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் இன்று மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
23
சூர்யா ரசிகர் மன்றம் விடுத்த அறிக்கை
அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சகோதர, சகோதரிகளுக்கும், ஊடக நண்பர்களுக்கும், சமூக வலைத்தள நண்பர்களுக்கும் வணக்கம். கடந்த சில நாட்களாக அண்ணன் சூர்யா அவர்கள் பற்றி சில பொய்யான தகவல்கள் இணையதளத்தில் பரவி வருகின்றன. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அண்ணன் சூர்யா அவர்கள் களமிறங்கப் போகிறார் என்று சமூக வலைத்தளங்களை மையமாக வைத்து இந்தப் பொய்யான செய்தி பரப்பப்பட்டு வருகிறது."
"இந்தச் செய்தி உண்மைக்கு மாறானது. இதுபோன்று அண்ணன் சூர்யாவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் செயல்களை யாரும் நம்ப வேண்டாம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
33
சினிமாவில் மட்டும் கவனம்
மேலும், "சினிமாவில் மட்டும் கவனம் செலுத்துமாறு அண்ணன் சூர்யா அறிவுறுத்தியுள்ளதாகவும், ரசிகர்கள் அதை மட்டும் பின்பற்ற வேண்டும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூர்யாவின் சார்பாக இந்த அறிக்கை, அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கத்தின் தலைவரான ஜி.ஹரிபிரசாத் மற்றும் பொதுச் செயலாளர் R.A. ராஜு ஆகியோரால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை, சூர்யாவின் ரசிகர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அரசியல் நிலைப்பாடு குறித்த விவாதங்களை முடிவுக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.