
இன்றைய யுகத்தில் தொழில்நுட்பம் வளர்வதை போலவே நோய்களும் பெருகி கொண்டிருக்கிறன. ஆரோக்கியமான வாழ்க்கை முறைதான் இதற்கு ஒரே தீர்வு எனலாம். நல்ல உணவு பழக்கம், சுறுசுறுப்பான வாழ்க்கை முறை, தரமான தூக்கம் போன்றவை ஒருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியது. நாம் எவ்வளவு சம்பாதித்தாலும் நமக்கான நேரத்தை ஒதுக்கி சுய பராமரிப்பு செய்து கொள்ள வேண்டும். அதுவே நீண்ட ஆயுளுக்கு உதவியாக இருக்கும். நீண்ட ஆயுள் என்பது ஆரோக்கியமான உணவு பழக்கம், முறையான வாழ்க்கை முறையால் கிடைக்கக்கூடியது.
ஆனால் வீட்டின் பொருளாதார சுமையை சுமந்து கொண்டிருக்கும் ஆண்களுக்கு தங்களுக்கான நேரத்தை ஒதுக்குவது கடினமாக இருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் ஆண்களுக்கான பிரச்சனைகள் பலவிதமாக இருக்கின்றன. அதிலும் ஆரோக்கிய பிரச்சனைகள் மோசமாகி வருகின்றன. பணிச்சுமை, குடும்பச் சூழல் போன்றவற்றின் காரணமாக ஆண்கள் மனசோர்வுக்கு ஆளாகி பல உடல்நல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டி இருக்கிறது. 30 வயதை கடக்கும் ஆண்கள் இந்த பிரச்சனைகளில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் ஆண்கள் தங்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியமாகிறது. இந்த பதிவில் 30 வயது ஆண்கள் தங்களுடைய ஆரோக்கியத்தை மேம்படுத்த எவ்வாறு செயல்பட வேண்டும், அதற்கான 4 யோகாசனங்கள் என்னென்ன என்பதை காணலாம்.
ஆரோக்கியமான உணவு பழக்கத்தையும், நல்ல தூக்கத்தையும் முதலில் பின்பற்ற வேண்டும். இதற்கு அடுத்தபடியாக சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கு தேவையானவற்றை செய்ய வேண்டும். ஜிம் செல்வதால் உடல் கட்டுக்கோப்பாக மாறும் என்பது உண்மை என்றாலும், அங்கு செல்ல முடியாவிட்டால் வீட்டிலேயே கூட உடலை பராமரித்துக் கொள்ள முடியும். வீட்டில் செய்வதற்கென்று சில எளிய பயிற்சிகள் உள்ளன. அந்த வகையில் யோகாசனங்கள் சிறந்த தேர்வாக இருக்கும். யோகாசனங்கள் செய்வதால் தலைமுடி, சருமம், பார்வை ஆகியவற்றில் ஏற்படும் பிரச்சனைகள் நிவர்த்தி ஆவதோடு தசை, எலும்புகளும் வலுவடைகின்றன. உடலில் இரத்த ஓட்டம் மேம்பட்டு, மூளைக்கும் இரத்த ஓட்டம் சீராகும். இதனால் படைப்பாற்றல், சிந்திக்கும் திறன் மேம்படுகிறது. பல உடல்நல பிரச்சனைகளை தீர்ப்பதற்கு யோகாசனங்கள் சிறந்த தீர்வாக இருக்கும்.
இடுப்பு கால்கள் முதுகு ஆகிய உடல் பகுதிகளை இயங்கச் செய்ய இந்த ஆசனம் சிறந்ததாக இருக்கும் இதை செய்வதால் இடுப்பு வலி முதுகு வலி போன்றவை இருந்தால் நிவாரணம் கிடைக்கும் நாள்பட்ட பிரச்சனைகளான நீரழிவு நோய் சிறுநீரகம் கோளாறுகள் போன்றவை குணமாகவும் இந்த ஆசனம் உதவுகிறது.
செய்முறை
இந்த ஆசனம் செய்வதற்கு முதலாவதாக இரண்டு கால்களையும் நீட்டி அமர வேண்டும். உங்களுடைய கைகளை பக்கவாட்டில் வைத்து ஆசனம் செய்ய தொடங்க வேண்டும். பின்னர் மூச்சை மெதுவாக உள்ள இழுத்தபடி உங்களுடைய கைகளை பக்கவாட்டில் இருந்து பின்பக்கமாக கொண்டு சென்று நேராக தலைக்கு மேல் உயர்த்துங்கள். இதன் பின்னர் மூச்சை உள்ளிழுத்தபடி முன்பக்கமாக குனிந்து கால் முட்டிகளை மடக்காமல் கால்களின் பெருவிரலை பிடித்து கொள்ளுங்கள். உங்களுடைய நெற்றி முழங்கால்களின் மீது பட வேண்டும். இந்த நிலையில் அப்படியே இருந்து 5 தடவை மூச்சு விட்ட பிறகு பழைய நிலைக்கு வரலாம். உங்கள் வசதிக்கேற்றப்டி இந்த ஆசனத்தை 3 முதல் 6 முறை திரும்ப செய்யலாம்.
இந்த ஆசனம் செய்வதற்கு கடினமாக இருக்காது. அதே நேரம் இதன் பலன்கள் அபாரமாக இருக்கும். ஆண்கள் செய்யக்கூடிய சிறந்த பயிற்சியாக இதனை சொல்லலாம். பல ஆண்கள் கடினத்தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களுடைய உடல்கள் நெகிழ்வுத்தன்மை இல்லாமல் இருக்கும். இந்த ஆசனத்தை செய்யும்போது அவர்களுக்கு கடினமாக இருக்கலாம். ஆனால் இதைத் தொடர்ந்து செய்யும்போது முதுகுத் தசைகள் உறுதியாகும். உடலின் தோரணை மேம்பட்டு பார்ப்பதற்கு கம்பீரமான தோற்றம் கிடைக்கும். மன அழுத்தம் இருப்பவர்கள் இதை செய்யும்போது மனச்சோர்வு நீங்கி நிம்மதியாக காணப்படுவார்கள்.
செய்முறை
இந்த ஆசனத்தை செய்ய முதலாவதாக குப்புற படுக்க வேண்டும். இரண்டு கால்களையும் ஒன்றாக வைத்து பின்னர் கைகளை மார்புக்கு அருகில் பக்கவாட்டில் வைக்க வேண்டும். இதை செய்த பின்னர் மூச்சை உள்ளிழுக்க வேண்டும். மூச்சை உள்ள இழுத்தபடியே தலை, மார்பு தொப்புள் பகுதி வரை மேலே தூக்க வேண்டும். இதனை செய்யும் போது உங்களுடைய அடிவயிற்றுப் பகுதி தரையில் இருப்பது முக்கியம். மூச்சை வெளியே விட்டபடி ஐந்து தடவை இயல்பாக சுவாசிக்க வேண்டும். இதன் பின்னர் பழைய நிலைக்கு திரும்பலாம். இந்த ஆசனத்தை ஒரு நாளுக்கு மூன்று முதல் ஆறு முறை திரும்பத் திரும்ப செய்யலாம்.
உடலை சமநிலைப்படுத்த மனதை இலகுவாக உணரச் செய்ய இந்த ஆசனம் சிறந்த ஒன்றாக இருக்கும். இதை செய்யும்போது உங்களுடைய உள்ளுறுப்புகள் நன்கு செயல்படும். கவனச் சிதறல் ஏற்படாது. பதட்டம், மன அழுத்தம் இருப்பவர்கள் இந்த ஆசனத்தை செய்வது சிறந்த பலன்களை அளிக்கும்.
செய்முறை
இந்த ஆசனத்தை செய்வதற்கு முதலாவதாக நேராக நிற்க வேண்டும். பின்னர் உங்களுடைய இடது காலை மடக்கி வலது தொடையின் உள்புறத்தில் வைத்து கொள்ள வேண்டும். இதை செய்யும் போது கால் விரல்கள் கீழ்நோக்கி இருப்பது அவசியம். மூச்சை உள்ளிழுத்தபடியே இரண்டு கைகளையும் தலைக்கு மேல் கூப்பி வைத்துக் கொள்ள வேண்டும் பின்னர் மூச்சை வெளியிட வேண்டும் இதே போலவே ஐந்து முறை இயல்பான சுவாசத்தை வெளியிட வேண்டும். இதேப் போல மற்றொரு காலையும் மாற்றி செய்ய வேண்டும். தினமும் மூன்று முதல் நான்கு முறை திரும்பத் திரும்ப செய்யலாம்.
ஆண்களுக்கு பல நன்மைகளை வாரி வழங்கக்கூடிய ஆசனம் வக்ராசனம். தினம் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் ஆண்களுக்கு முதுகு வலி பிரச்சனை இருக்கும். இந்த ஆசனம் முதுகு வலி, இடுப்பு வலி போன்றவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கும். மலச்சிக்கல் அஜீரணக் கோளாறுகள் ஏற்படுவதை தடுக்கும். சர்க்கரை நோய் இருப்பவர்கள் இந்த ஆசனம் செய்யும் போது அந்நோய் கட்டுக்குள் வரும்.
செய்முறை
முதலில் உங்களுடைய கால்களை நீட்டி நேராக உட்காருங்கள். பின்னர் இடது காலை மடித்து பாதம் வலது முழங்காலை தொடுமாறு வைத்துக் கொள்ளுங்கள். மூச்சை மெதுவாக உள்ளே இழுத்தபடி வலது கையை இடது முழங்காலுக்கு மேற்புறமாக கொண்டு சென்று இடது கணுக்காலை பிடித்துக் கொள்ளுங்கள். இதைச் செய்யும் போது உங்களுடைய இடதுகையை முதுகிற்கு பின்புறமாக தரையில்படுமாறு வைக்க வேண்டும். பின்னர் மூச்சை மெதுவாக வெளியிட்டபடி உடலை இடது பக்கமாக திருப்பி பின்னோக்கி பார்க்க வேண்டும். இந்த நிலையில் இருந்தபடி ஐந்து முறை இயல்பான சுவாசத்தை வெளியிட வேண்டும். பின்னர் பழைய நிலைக்கு திரும்பலாம். இதே மாதிரி வலது புறமும் செய்ய வேண்டும்.