குடல் உணவை உடைத்து, உண்ணும் உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுகிறது. ஆரோக்கியமான குடல், நோய் எதிர்ப்பு சக்தி, மன ஆரோக்கியம் மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. நீங்கள் உண்பது குடல் நுண்ணுயிரிகளை நேரடியாக பாதிக்கிறது.
27
Foods That Damage Gut Health
சமச்சீரான உணவு குடல் பாக்டீரியாக்களை வளர்த்து, அவற்றை ஆரோக்கியமாக வைத்திருக்கும். மறுபுறம், சில உணவுகள் குடல் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். அந்த உணவுகள் எவை என்று பார்ப்போம்...
37
பதப்படுத்தப்பட்ட மற்றும் வறுத்த உணவுகள்
பதப்படுத்தப்பட்ட மற்றும் வறுத்த உணவுகள் குடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். சிப்ஸ், ஃபாஸ்ட் ஃபுட், டோனட்ஸ், பாஸ்தா, பீட்சா போன்றவற்றில் ஆரோக்கியமற்ற கொழுப்புகள், சர்க்கரை அதிகம். இது குடல் பாக்டீரியாவை அழித்து, வீக்கத்தை ஏற்படுத்துகிறது.
சர்க்கரை மற்றும் செயற்கை இனிப்புகள் குடலை பாதிக்கலாம். சர்க்கரை குடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளுக்கு உணவளிக்கிறது, அதே நேரத்தில் இனிப்புகள் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
57
அதிகப்படியான மது அருந்துதல்
அதிகப்படியான மது அருந்துதல் குடலை மட்டுமல்ல, கல்லீரல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். இது ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதையும் தடுக்கலாம்.
67
சிவப்பு இறைச்சி
அதிகளவு சிவப்பு இறைச்சி உண்பது வீக்கம் மற்றும் தீங்கு விளைவிக்கும் சேர்மங்களின் உற்பத்தியுடன் (TMAO) தொடர்புடையது. சிவப்பு இறைச்சி போன்ற கொழுப்பு உணவுகள் வயிறு உப்புசம் அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
77
பால் பொருட்கள்
அதிகப்படியான பால் பொருட்கள், லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்களுக்கு வயிறு உப்புசம் மற்றும் வாயுவை ஏற்படுத்தும்.