ஹீமோகுளோபின் குறைபாடு இன்று பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். ஹீமோகுளோபின் என்பது சிவப்பு இரத்த அணுக்களில் காணப்படும் இரும்புச்சத்து நிறைந்த புரதமாகும். இதன் அளவு குறையும்போது சோர்வு, பலவீனம், மூச்சுத் திணறல் மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
29
Iron Rich Foods List
இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி-12 நிறைந்த உணவுகளை சாப்பிடுவது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும். ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி இங்கு காண்போம்.
39
வைட்டமின்-சி நிறைந்த உணவுகள்!
வைட்டமின்-சி நிறைந்த உணவுகளை டயட்டில் சேர்க்கவும். ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை மற்றும் பெர்ரி போன்ற பழங்களில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது.
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க சிறந்த உணவுகளில் மாதுளையும் ஒன்று. இதில் புரதம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
59
பேரீச்சம்பழம்
இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் இரும்புச்சத்து பேரீச்சம்பழத்தில் ஏராளமாக உள்ளது. தினமும் இரண்டு பேரீச்சம்பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
69
பீட்ரூட்
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க சிறந்த வழிகளில் ஒன்று பீட்ரூட். இதில் இரும்புச்சத்து மட்டுமல்ல, ஃபோலிக் அமிலம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துக்களும் அதிகம்.
79
பருப்பு வகைகள்
பருப்பு, வேர்க்கடலை, பீன்ஸ் போன்ற பருப்பு வகைகள் ஹீமோகுளோபின் அளவை கணிசமாக அதிகரிக்க உதவும். இவற்றில் உள்ள இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலம் இரத்த சிவப்பணு உற்பத்தியை அதிகரிக்கும்.
89
பூசணி விதைகள்
பூசணி விதைகளில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் மாங்கனீஸ் நிறைந்துள்ளன. இவற்றை சாலடுகள் அல்லது ஸ்மூத்திகளில் சேர்த்து சாப்பிடலாம்.
99
தர்பூசணி
இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்த தர்பூசணி, இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இதை ஜூஸ், ஸ்மூத்தி அல்லது சாலட் வடிவில் சாப்பிடலாம்.