Cough Syrups for Kids: பெற்றோர்களே எச்சரிக்கை..! குழந்தைகளின் உயிரை பறிக்கும் இருமல் மருந்துகள்..ஏன் தெரியுமா?

Published : Oct 12, 2022, 04:16 PM IST

Cough Syrups for Kids: குழந்தைகளுக்கு கடைகளில் இருமல் மருந்துகளை வாங்கி கொடுப்பதற்கு முன்னாடி, மருத்துவரிடம் வேண்டிய ஆலோசனை பெறுவது அவசியமான ஒன்றாகும். 

PREV
14
Cough Syrups for Kids: பெற்றோர்களே எச்சரிக்கை..! குழந்தைகளின் உயிரை பறிக்கும் இருமல் மருந்துகள்..ஏன் தெரியுமா?

மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில், 66 குழந்தைகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மற்றும் ஜலதோஷத்துக்காக கொடுக்கப்படும் மருந்து உட்கொண்டதினால் இறந்து விட்டனர். இந்த விவகாரம் காட்டு தீ போல் பரவ ஆரம்பித்துள்ளது. 

மேலும் படிக்க...Fiber foods: உடலில் நச்சுக்களை வெளியேற்ற உதவும் நார்ச்சத்து உணவுகள்! தினமும் எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?
 

24

இதனை தொடர்ந்து அந்த மருந்தை ஆய்வுக்கு உட்படுத்திய உலகம் சுகாதார மையம், இந்தியாவை சேர்ந்த ஃபார்மா கம்பெனி தயாரித்த, கோஃபெக்ஸ்மெளின் பேபி சிரப், புரோமெதசின் ஓரல் சொல்யுஷன், மேகாஃப் பேபி சிரப், மேகிரிப் கோல்ட் சிரப்
என்ற 4 இருமல் மருந்துகள் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

34

மேலும், இந்த மருந்துகளில்அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக டைஎத்திலீன் கிளைக்கால், மற்றும் எத்திலீன் கிளைக்கால் இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால், அந்த கம்பெனியின் இருமல் மருந்துகளை வாங்குவதற்கு தடை விதித்து உலக சுகாதார அமைப்பு உத்தரவிட்டுள்ளது. கெட்டுபோன மருந்துகள் மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவைத் தவிர வேறு சில நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகியிருக்கலாம் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க...Fiber foods: உடலில் நச்சுக்களை வெளியேற்ற உதவும் நார்ச்சத்து உணவுகள்! தினமும் எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?

 

44

ஏனெனில், இந்த மருந்துகளில் உள்ள மூலப் பொருட்கள் அடிவயிற்று வலி, வாந்தி, வயிற்றோட்டம், சிறுநீர் கழிப்பதில் சிக்கல், தலைவலி, மனநிலையில் குழப்பம், சிறுநீரக பாதிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். சில நேரம் மனித உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவையே என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் மக்கள் பலர் பீதியில் உள்ளனர். எனவே, இனிமேல் மருந்து கடைகளில் மருத்துக்களை வாங்கி, குழந்தைகளுக்கு உபயோகிப்பதற்கு முன்னாடி மருத்துவரிடம் தேவையான ஆலோசனை பெற்றிருப்பது அவசியமான ஒன்றாகும்.

Read more Photos on
click me!

Recommended Stories