Winter Skin Care : குளிர்கால சரும வறட்சியால் வெள்ளையா தோல் மாறுதா? இந்த '5' ஜூஸ்களில் ஒன்னு ட்ரை பண்ணுங்க

Published : Dec 30, 2025, 02:37 PM IST

குளிர்காலத்தில் ஏற்படும் சரும வறட்சியைப் போக்க குடிக்க வேண்டிய ஐந்து ஜூஸ்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

PREV
16
Winter Detox Juices For Skin

தற்போது குளிர் காலம் என்பதால் குளிர்ந்த காற்றின் காரணமாக சருமம் வறட்சியாகுவது மட்டுமின்றி, தோலும் வெள்ளை வெள்ளையாக மாறும். இதனை தவிர்க்க சருமத்தை உள்ளிருந்து ஊட்டமளிக்க வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நீரேற்றத்தால் நிரப்ப வேண்டும். இத்தகைய சூழ்நிலையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஐந்து பானங்களில் ஏதேனும் ஒன்றை தினமும் குடித்து வந்தால் குளிர்காலத்தில் சருமம் வறட்சியடைவது தடுக்கப்படும். அவை என்னென்ன என்பது குறித்து இங்கு காணலாம்.

26
1. மாதுளை பீட்ரூட் மற்றும் ஆப்பிள் :

இதற்கு 1 கப் மாதுளை, ஒரு பீட்ரூட் மற்றும் ஒரு ஆப்பிள் ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டிக் கொள்ளுங்கள். பிறகு அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் புதினா இலைகளை சேர்த்து குடிக்கவும். மதுளையில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் புற ஊதா சேதத்தில் இருந்து உடலை பாதுகாக்கும். மேலும் ஆப்பிள் மற்றும் பீட்ட்ருட் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி சருமத்தை ஆரோக்கியமாக வைக்க உதவி புரிகின்றது.

36
2. ஆரஞ்சு மற்றும் அன்னாசி பழம் :

ஒரு கப் அன்னாசி பழத்துடன் ஒரு ஆரஞ்சு பழம், சின்னத்துண்டு இஞ்சி ஆகியவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து அதை வடிகட்டி கொள்ளுங்கள். அதனுடன் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு கருப்பு மிளகு சேர்த்து குடிக்கவும். ஆரஞ்சு மற்றும் அன்னாசி பழத்தில் இருக்கும் வைட்டமின் சி குளிர்கால தொற்று நோய்களை எதிர்த்து போராடும். மஞ்சள் வயதான எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன. மிளகுத்தூள் தொண்டை பிரச்சினையை குணப்படுத்தும். ஆகவே இந்த பானம் குளிர்காலத்திற்கு ஏற்ற பானமாக கருதப்படுகிறது.

46
ஆப்பிள், வெள்ளரி மற்றும் கீரை :

தோல் நீக்கிய வெள்ளரிக்காய் 1, பச்சை ஆப்பிள் 1, 1 கப் கீரை, புதினா இலைகள் சிறிதளவு மற்றும் 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து ஒன்றாக அரைத்து வடிகட்டாமல் குடியுங்கள். அவற்றில் இருக்கும் நார்ச்சத்து முழுமையாக கிடைக்கும். வெள்ளரிக்காய் உடலை நீரேற்றமாக வைக்கும், கீரையில் இருக்கும் வைட்டமின்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் பச்சை ஆப்பிள் மூளை செயல்பாடு இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். மேலும் இதில் இருக்கும் ஆக்சிஜனேற்றிகள் மற்றும் நார்ச்சத்துக்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

56
4. கற்றாழை ஜூஸ் :

2-3 கற்றாழையில் இருந்து ஜெல்லை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் தேன் மற்றும் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து அந்த ஜூஸை வடிகட்டி குடிக்கவும். கற்றாழையில் இருக்கும் ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் சருமத்திற்கு பளபளப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல் சருமத்தை நீரேற்றமாக வைத்துக் கொள்ளும். மேலும் இதில் இருக்கும் வைட்டமின் பி12 நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி தொற்று நோய்களிலிருந்து உடலை பாதுகாக்கும்.

66
5. காய்கறி ஜூஸ் :

சின்ன கேரட் 1, சிவரிக்கீரை தண்டுகள் 2-4, தண்டு நீக்கப்பட்ட பரட்டை கீரை இலைகள் 4-6, தோல் நீக்கிய வெள்ளரிக்காய் ஒன்று மற்றும் ஒரு சின்ன துண்டு இஞ்சி ஆகியவற்றை ஒன்றாக மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து வடிகட்டி அதனுடன் 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு கப் தேங்காய் தண்ணீர் சேர்த்து கலந்து பிறகு குடிக்கவும். இஞ்சியில் செரிமான பண்புகள் உள்ளன. பரட்டை கீரையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. சிவரிக் கீரை தண்டுகள் உடலுக்கு தேவையான புத்துணர்ச்சியை வழங்கி நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவும். மேலும் சருமத்தையும் எளிமையாக வைக்கும்.

மேலே சொல்லப்பட்டுள்ள ஐந்து பானங்களில் ஏதேனும் ஒன்றை குளிர்காலத்தில் குடித்து வந்தால் சருமம் பளபளப்பாகவும், இளமையாக்கவும் மற்றும் நீரேற்றமாகவும் இருக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories