குளிர்காலத்தில் தொடங்கியாச்சு. இந்த சீசனில் வயதானவர்கள் மட்டுமல்ல இளைஞர்களும் மூட்டு வலி, விறைப்பு பிரச்சினையை அனுபவிக்கின்றனர். குறிப்பாக நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கு இந்த வலி மிகவும் கடுமையாக இருக்கும்.
25
Winter Joint Pain
மூட்டு வலியால் அன்றாட வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. இதுபோன்ற சூழ்நிலையில் குளிர்காலத்தில் மூட்டு வலி ஏன் அதிகரிக்கிறது என்பதை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே இந்த பதிவில் குளிர்காலத்தில் மூட்டு வலி அதிகமாக வலிப்பது ஏன்? வலியை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
35
குளிர்காலத்தில் மூட்டு வலி அதிகரிப்பது ஏன்?
குளிர்காலத்தில் வெப்பநிலை குறைவதால் தசைகள் மற்றும் மூட்டுகள் விறைப்பாகி வலி மற்றும் விறைப்பை அதிகரிக்கும். உடல் செயல்பாட்டையும் தவிர்க்கிறோம். மேலும் இரத்த ஓட்டமும் குறைகிறது. போதுமான வெப்பம் மற்றும் ஊட்டச்சத்து மூட்டுகள் அடைவதை தடுக்கப்படுவதால் குளிர்காலத்தில் மூட்டு வலி அதிகமாகிறது. குறிப்பாக ஏற்கனவே மூட்டு வலி கீழ்வாதம் பிரச்சனை உள்ளவர்களுக்கு வலியை அதிகமாக அனுபவிக்கிறார்கள்.
நீண்ட நேரம் ஒரே நிலையில் வேலை செய்பவர்கள் மற்றும் உடற்பயிற்சி செய்யாதவர்களிடம் இந்த பிரச்சனை மோசமாக காணப்படுகிறது. அதுபோல ஹார்மோன் மாற்றங்கள், கால்சியம் குறைபாடு, வைட்டமின் டி குறைபாடு போன்ற காரணத்தினாலும் குளிர்காலத்தில் மூட்டு வலி அதிகமாகிறது. இதை ஆரம்பத்திலேயே சரியாக கவனிக்காவிட்டால் வலி படிப்படியாக மோசமடைந்து அன்றாட நடவடிக்கைகளில் தலையிடும்.
55
குளிர்காலத்தில் மூட்டு வலியை தடுக்க பின்பற்ற வேண்டியவை :
- தினமும் ஏதாவது ஒரு உடற்பயிற்சி செய்யுங்கள்
- சூடான நீரில் குளிக்கவும்
- ஒரே நிலையில் நீண்ட நேரம் உட்காருவதை தவிர்க்கவும்
- வைட்டமின் டி மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள்.
- வலி கடுமையாக இருந்தால் உடனே மருத்துவர் அணுகவும்.