காலையில் எழுந்ததும் மொபைல் யூஸ் பண்றீங்களா? 'இந்த' பிரச்சினை வரும் உஷார்!!
Morning Phone Use Effects : காலை எழுந்தவுடன் மொபைல் போன் பார்ப்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
Morning Phone Use Effects : காலை எழுந்தவுடன் மொபைல் போன் பார்ப்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
நம்மில் பெரும்பாலானோருக்கு காலை எழுந்த உடனே மொபைல் போனை பார்க்கும் பழக்கம் உண்டு. அதுவும் குறிப்பாக, மொபைல் போனில் வைத்த அலாரத்தை அணைத்த பிறகு குறுஞ்செய்திகள், சமூக ஊடகங்களை ஸ்க்ரோலிங் செய்வது அல்லது ஏதாவது செய்திகளை பார்ப்பது என எதுவாக இருந்தாலும் அவற்றைப் பார்க்காமல் இருக்க மாட்டோம். ஆனால் இந்த பழக்கத்துடன் உங்களது நாளை நீங்கள் தொடங்கினால், நீங்கள் நினைத்துப் பார்ப்பதை விட அதிக தீங்கு உங்களுக்கு விளைவிக்கும் தெரியுமா?
ஆம், காலை எழுந்தவுடன் மொபைல் போன் பார்த்தால் நாள் முழுவதும் நமது செயல் திறன் தடுக்கப்படும். மேலும் ஆரோக்கியமான பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய நமது காலை நேரங்களும் திருடப்படுகிறது. முக்கியமாக உங்களது மனதிற்கு தேவையான அமைதியை கொடுப்பதற்கு பதிலாக நீங்கள் போ நீ பார்த்து அதிக தகவல்களை நிரப்புகிறீர்கள். இப்போது காலை எழுந்தவுடன் மொபைல் போன் ஏன் பார்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் இங்கே.
தூங்கி எழுந்தவுடன் மொபைல் போனில் சமூக ஊடகங்கள், குறுஞ்செய்திகளை ஸ்க்ரோல் செய்து பார்க்கும் போது முக்கியமாக, கவனக்குறைவாக ஸ்க்ரோல் செய்யும்போது அதனால் தேவையில்லாத மன அழுத்தம், மனசோர்வு மற்றும் பதட்டம் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
மன செயல்திறன் பாதிக்கப்படும்:
காலை எழுந்தவுடன் உடல் மற்றும் மனதை அறிமுகப்படுத்துவது மிகவும் அவசியம். ஆனால் அதற்கு பதிலாக நீங்கள் மொபைல் போனில் குறுஞ்செய்திகள், சமூக ஊடகங்களை பார்த்து நேரத்தை செலவழித்தால், இதனால் நாளுக்கான திட்டத்தை சரியாக செய்ய முடியாமல் போகிறது.
இதையும் படிங்க: மொபைல் போனுக்கு எப்போது சார்ஜ் போடனும்? நிறைய பேருக்கு தெரியாத விஷயம்.. சூப்பர் டிப்ஸ்!!
தூங்கி எழுந்தவுடன் நம்முடைய பணிகளை செய்வதற்கு பதிலாக மொபைல் போனில் சமூக ஊடகங்கள் பார்த்து அதிக நேரம் அதில் செலவழித்தால், அது நம்மை எதிர்வினையைற்றும் நிலையில் தள்ளிவிடும். இதனால் நாள் முழுவதும் நம்மால் ஒழுங்காக வேலை செய்ய முடியாமல் போய்விடுகிறது.
போனுக்கு அடிமை:
இது உண்மைதான். காலை எழுந்தவுடன் போனை பார்க்கும் பழக்கம் இருப்பது நம்மை போனுக்கு அடிமையாக்குவதற்கான அறிகுறி ஆகும். மேலும் அதிகரிக்கும் மற்றும் நம்முடைய ஆரோக்கியத்தை மோசமாக்கும். எனவே இது பழக்கத்தை கட்டுப்பாட்டில் வைக்கவும், இல்லையென்றால் அதில் அதிகமாக மூழ்கி விடுவோம்.
இதையும் படிங்க: இந்த கிராமத்தில் மின்சாரம், செல்போன் இல்லாமல் வாழும் மக்கள்! எங்குள்ளது தெரியுமா?
உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த காலை எழுந்தவுடன் மனதிற்கு நிறைவான சூழலை உருவாக்க வேண்டும் அதற்கு யோகா தியானம் அல்லது உடற்பயிற்சி செய்யுங்கள். முக்கியமாக காலை எழுந்தவுடன் நடைப்பயிற்சி செய்வது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. இதனால் நம்மை மொபைல் பார்க்கும் பழக்கத்திலிருந்து விலக்கி வைக்கும். எனவே உங்களிடம் இந்த பழக்கம் இருந்தால் உடனே அதை மாற்றி உங்களது காலையை பயனுள்ளதாக மாற்ற முயற்சி செய்யுங்கள். நாள் நாள் முழுவதும் நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.