வெயில்ல உள்ளாடைகள் 'எப்படி' போடனும்? இந்த தப்ப பண்ணா மோசமான விளைவுகள்

Published : Mar 31, 2025, 12:45 PM ISTUpdated : Mar 31, 2025, 01:04 PM IST

நீங்கள் உள்ளாடைகளை இறுக்கமாக அணியும் போது உடல் நலத்திற்கு என்னென்ன பாதிப்பு ஏற்படும் என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

PREV
14
வெயில்ல உள்ளாடைகள் 'எப்படி' போடனும்? இந்த தப்ப பண்ணா மோசமான விளைவுகள்

Dangers of Tight Underwear : நம்மில் சிலருக்கு உள்ளாடைகளை இறுக்கமாக அணியும் பழக்கம் இருக்கும். ஆனால் இந்த பழக்கம் உடல் நலத்திற்கு நல்லதல்ல. உண்மையில் உள்ளாடைகளை இறுக்கமாக அணியாமல் நல்ல காற்றோட்டத்துடன் அணிவதே ஆரோக்கியத்திற்கு நல்லது என்று நிபுணர்கள் சொல்லுகின்றன. சரி, இப்போது உள்ளாடைகளை இறுக்கமாக அணிவதால் உடல் நலத்திற்கு என்னென்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

24
உள்ளாடையை ஏன் இறுக்கமாக அணியக்கூடாது?

ரத்த ஓட்டம் பாதிக்கப்படும் : உள்ளாடைகளை இறுக்கமாக அணிந்தால் உடலில் ரத்த ஓட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

பிறப்புறுப்பு பகுதியில் பாதிப்பு : இறுக்கமான உள்ளாடைகளை அணிந்தால் பிறப்புறுப்பு பகுதியில் சிறுநீர் நோய் தொற்று, ஈஸ்ட் மற்றும் பிற தொற்று நோய்கள் அபாயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

சரும பிரச்சனை : உள்ளாடைகளை இறுக்கமாக அணிந்தால் சருமத்தில் உராய்வு, எரிச்சல், சிவத்தல், அரிப்பு, தடிப்புகள் போன்றவற்றை ஏற்படுத்தும்.

பிரா இறுக்கமாக அணியாதே! பெண்கள் இறுக்கமான பிரா அணிந்தால் ரத்த ஓட்டம் தடைப்படும் இதனால் செல்களுக்கு குறைவான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

இதையும் படிங்க: ஓட்டை விழுந்த உள்ளாடைகளை பயன்படுத்தலாமா? உள்ளாடைகள் காலாவதி ஆகுமா? உண்மை என்ன?

34

ஆண்களுக்கு பிரச்சனை : ஆண்கள் இறுக்கமான உள்ளாடை அணிந்தால் விந்தணுவின் உற்பத்தி மற்றும் அதன் தரம் பாதிக்கப்படும்.

நெஞ்செரிச்சல் : உள்ளாடைகளை இறுக்கமாக அணியும் போது வயிற்றுப் பகுதி இறுக்கப்படுவதால் சில சமயங்களில் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும்.

இரவில் போடாதே! பொதுவாக இரவு தூங்கும் போது அணிந்து தூங்கக் கூடாது என்று நிபுணர்கள் சொல்லுகிறார்கள். அதுவும் குறிப்பாக இருக்குமான உள்ளாடைகளை அணிந்து தூங்கினால் சரும எரிச்சல் மற்றும் புண்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

மார்பக புற்றுநோய் ; பெண்கள் நீண்ட நேரம் இறுக்கமான பிரா அணிந்தால் மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக நிபுணர்கள் சொல்லுகின்றனர்.

இதையும் படிங்க:  உள்ளாடைகளுக்கும் காலாவதி தேதி உண்டா...? ரொம்ப நாள் யூஸ் பண்ணா விளைவு பயங்கரம்!

44
உள்ளாடைகள் அணிவதற்கான சரியான தீர்வு:

1. எப்போதுமே காட்டன் உள்ளாடைகளை அணியுங்கள். அதுதான் ஈரத்தை உறிஞ்சிக் கொள்ளும் தன்மையை கொண்டது.

2. உங்கள் அழகை விட சற்று பெரிய அளவில் உள்ளாடைகளை அணிவது தான் நல்லது.

3. உள்ளாடைகளை ஒரு நாளைக்கு ஒருமுறை கண்டிப்பாக மாற்ற வேண்டும். இல்லையெனில், பாக்டீரியாவில் ஏற்படும் தொற்று நோய் வர வாய்ப்பு அதிகம் உள்ளது.

4. அதிக நேரம் உள்ளாடைகள் அணிவதே தவிர்க்க வேண்டும். அதுபோல ஷேப் வியர் (shape wear) தவிர்ப்பது நல்லது.

5. தூங்கும் போது ஒருபோதும் உள்ளாடைகளை அணிய வேண்டாம். ஒருவேளை அப்படி அணிய விரும்பினால் தளர்வான உள்ளாடைகளை அணிவது தான் சிறந்தது.

குறிப்பு : இனி உள்ளாடைகள் அணியும் போது இந்த விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டு, உங்களது ஆரோக்கியத்தை காத்துக் கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories