பலரும் தங்களது நாளை ஒரு கப் டீ அல்லது காபி குடித்துதான் ஆரம்பிப்பார்கள். டீ, காபி குடிக்காதவர்களை விரல் விட்டு எண்ணிடலாம். அதிலும் குறிப்பாக பலரும் அதிகமாக விரும்பி குடிப்பது டீ தான். டீ சோம்பலை போக்கி உடலுக்கு உடனடி புத்துணர்ச்சியை வழங்கும். ஆனாலும், உணவுக்குப் பிறகு டீ குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அது செரிமான அமைப்பில் நேரடி விளைவை ஏற்படுத்தும். இதனால் உணவு சரியாக ஜீரணமாகாமல் போகும். வாயு, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். மேலும் டீயில் காஃபின் உள்ளன. இப்போது இந்த பதிவில் உணவுக்கு பிறகு டீ குடிப்பதால் ஆரோக்கியத்தில் ஏற்படும் சில மோசமான விளைவுகள் குறித்து காணலாம்.
26
அடிக்கடி தலைவலி
சாப்பிட்ட உடனே டீ குடித்தால் அடிக்கடி தலைவலி பிரச்சினை ஏற்படும். காரணம் அமிலத்தன்மை. செரிமான பிரச்சனையின் காரணமாக இந்த தலைவலி ஏற்படுகிறது.
36
வாயு மற்றும் நெஞ்செரிச்சல்
ஆரோக்கியமான உணவு சாப்பிட்ட பிறகு டீ குடிப்பது சாப்பிட்ட உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலால் சரியாக உறிஞ்ச முடியாமல் போகும். இது தவிர உணவும் ஜீரணிக்க கடினமாக இருக்கும். இதன் விளைவாக வாயு மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படும்.
நீங்கள் மதியம் அல்லது இரவு உணவுக்கு பிறகு டீ குடித்தால் பல நோய்கள் வருவதற்கு வழிவகுக்கும். அவற்றில் ஒன்றுதான் இதய நோய். உங்களிடம் அடிக்கடி இந்த பழக்கம் இருந்தால் ரத்த அழுத்தம் அதிகரித்து, இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும்.
56
இரும்புச்சத்து குறைபாடு
டீயில் இருக்கும் டானின் என்ற பொருள் ரத்தத்தில் இரும்புச்சத்து உறிஞ்சப்படுவது தடுக்கும் எனவே சாப்பிட்ட டீ குடிப்பதை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில், நீண்ட காலத்திற்கு இரும்புச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தும்.
66
எந்த டீ குடிக்கலாம்?
உணவுக்குப் பிறகு டீ குடிக்க விரும்பினால் இஞ்சி டீ அல்லது கிரீன் டீ குடிப்பது சிறந்த தேர்வு. ஏனெனில் இந்த வகை டீ தான் உணவுகளை செரிமானம் செய்வதற்கு பெரிது உதவும். ஆனால் உடனே குடிக்காமல் சிறிது இடைவெளி எடுத்து குடிக்கவும். அதுவும் மிதமான அளவில் தான்.